Latest News

April 24, 2016

அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு கோரும் "YES TO REFERENDUM" இலச்சினை : உலகத்தமிழ் வரைகலைஞர்களுக்கு அறைகூவல் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
by admin - 0

அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு கோரும் "YES TO REFERENDUM" இலச்சினை : உலகத்தமிழ் வரைகலைஞர்களுக்கு அறைகூவல் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கு கோரும்  "YES TO REFERENDUM" செயல்முனைப்புக்கு, இலச்சினை கோரும் அறைகூவல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டாக 2016 அமைந்துள்ள நிலையில், இத்தீர்மானத்தினது அரசியற் பரிமாணமாக,பொதுசன வாக்கெடுப்பினை அனைத்துலக சமூகத்திடம் கோரும் செயற்திட்டமாக "YES TO REFERENDUM"அமைகின்றது.

எதிர்வரும் மே 14 முதல் 16 வரை அமெரிக்காவில் இடம்பெறவிருக்கின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டு எழுச்சியரங்கில் "YES TO REFERENDUM"க்கான இலச்சினை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது.

இந்நிலையில், "YES TO REFERENDUM"க்கான பொது இலச்சினையினை தேர்ந்தெடுக்கும் பொருட்டு உலகத்தமிழ் வரைகலைஞர்களை நோக்கி அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் "YES TO REFERENDUM" இலச்சினைக்கு சன்மானம் வழங்கபட இருப்பதோடு, கௌரவரவும் வழங்கப்பட இருக்கின்றது.

எதிர்வரும் மே 10ம் திகதிக்கு முன்னர் குறித்த media@tgte.org இந்த மின்னஞ்சல் முகவரிக்கு இலச்சினை வரைவும், மேலதிக விபரங்களையும் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வரைகலைத் துறையில் ஆர்வம் உள்ள அனைவரும் இதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து பங்கெடுக்கும் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் விடயங்கள் இலச்சினையின் அடிநாதமாக இருத்தல் வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

- "YES TO REFERENDUM"

- தமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும்  வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துக.

- தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் இப்பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும்.

நாதம் ஊடகசேவை
« PREV
NEXT »

No comments