ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் தமிழர்களுக்கு சித்திரவதைகள் தொடர்கின்றன என்று சித்தரவைதைகளுக்கு எதிரான மற்றும் இறைமைசார் கொள்கைகளின் பணிப்பாளர் சோன்யா சீட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
"கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்னரும் சித்திரவதைகள் தொடர்பில் ஸ்ரீலங்காவிலிருந்து 8 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த 8 பேரையும் தடுத்து வைத்தும், சித்திரவதை செய்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அபாயகரமான மற்றும் சூடேற்றப்பட்ட உலோகக் கம்பிகளைப் பயன்படுத்தி இந்த சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதாகவும், பாலியல் சித்திரதைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிலிருந்து உயிர்தப்பியவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.
சுகாதார பயிற்சியாளர்கள், மனநல நிபுணர்கள் உட்பட தேசிய சுகாதாரத் அல்லது வழக்கறிஞர்கள் ஆகியோரால் தங்களுக்கு வழங்கப்பட்ட காயங்கள் தடயவியல் ஆவணங்களை வைத்து குறித்த 8 பேரும் பிரித்தானியாவிற்கு வந்து புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் இவர்களில் ஒருவருக்கு பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பு அளித்து வருகின்றது" என்று கூறியுள்ளார்.
No comments
Post a Comment