Latest News

April 22, 2016

கங்குவேலி–படுகாடு பகுதியில் சிங்களவர்கள்
by admin - 0

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள மூதூர் – கங்­கு­வேலி படு­காடு பகு­தியில் நேற்று வியா­ழக்­கி­ழமை காலை விவ­சா­யிகள் மத்­தியில் முறுகல் நில­மை­ ஏற்­பட்­டது.இதனால் இப்­ப­கு­தியில் சற்று பதற்ற நிலைமை காணப்­பட்­டது. இத­னை­ய­டுத்து சம்­பவம் பற்றி எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்பந்­தனின் கவ­னத்­திற்கு விவ­சா­யிகள் கொண்டு வந்ததையடுத்து  அவர் மூதூர் பொலி­ஸாரை உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து ஸ்தலத்­திற்கு விஜயம் செய்த மூதூர் பொலிஸார் நிலை­மையை கட்­டுப்­ப­டுத்தி. விவ­சா­யி­களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்­தனர்.

இப்­ப­கு­தியில் உள்ள பாரம்பரிய தமிழ் விவசா­யி­களின் காணி­களில் சில சிங்­கள இளை­ஞர்கள் அத்­து­மீறி விவ­சாயம் செய்­வது பற்­றிய முரண்­பாடே இந்­நி­லைமை ஏற்­ப­டக் ­கா­ர­ண­மென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
தற்­சயம் கங்­கு­வேலி – படு­காடு வயல் வெளி­க­ளுக்கு நீர் வழங்­கப்­பட்டு வரும் நிலையில் விவ­சா­யிகள் பணி­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 இத­ன­டிப்­ப­டையில் படு­காடு விவ­சா­யி­களும் தமது காணி­க­ளுக்குள் வேலை­களை செய்­ய­முற்­ப­டு­கையில் உழவு இயந்­தி­ரத்தில் சேரு­நு­வர பிரி­வைச் ­சார்ந்த  தெகி­வத்­தைக்­ கி­ரா­மத்­தி­லி­ருந்­து­வந்த சில சிங்­கள  இளை­ஞர்கள்  வயலில் இறங்க முற்­பட்­ட­தாக அங்கு வேலையில் ஈடு­பட்­டி­ருந்த விவ­சா­யிகள் குறிப்பிட்டனர். 

இதனால் தமது பாரம்­ப­ரிய வயலில் அத்துமீறல் செய்வதற்கு அனு­ம­திக்க முடி­யாது என தமிழ் விவ­சா­யிகள் எதிர்த்த நிலையில் சற்று பதற்­ற­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளன. இது சம்பந்தமாக பொலிஸாரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்ததையடுத்து மூதூரில் இருந்து பொலி ஸார் ஸ்தலத்­திற்கு விரைந்து இரு­ப­கு­தி­யி­ன­ரு­டனும் பேசி­ய­துடன் இந்த விவ­சாய நட­வ­டிக்­கையை தற்­கா­லி­க­மாகக்  கைவி­டு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.

இதனையடுத்து அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த தமிழ் விவ­சா­யிகள் கடந்த 2010 இல் இருந்து இவ்­வாறு பொலிஸார் வரு­வதும் சில நாட்கள் தள்­ளி­ப்­போ­டு­வதும் பின்னர் சில சிங்­கள விவ­சா­யிகள் பலவந்தம் செய்­வதும் வழ­மை­யாகி விட்டதாக கூறினர்.

கடந்த முறை­கூட மூதூர்  பிர­தேச செய­லாளர்  மற்றும் பொலி­ஸாரின்  கருத்தை மதித்து தமிழ் விவ­சா­யி­க­ளா­கிய நாம் எமது பல­நூறு ஏக்கர் வயல் செய்கையை நிறுத்­தி­யி­ருந்தோம்.இதனால் எமது வாழ்­வா­தாரம் தான் பாதிக்­கப்­பட்­டது. ஆனால் குறித்த ஒரே குடும்­பத்­தைச் ­சார்ந்த மூவர் தொடர்ந்து எமது வயல்­கா­ணி­களில் அத்துமீறி செய்கை பண்­ணி­னார்கள். அதனை பொலிசார் தடுக்க வில்லை. பிர­தேச செய­லாளர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் அவர்கள் அறு­வடை செய்யும் வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்க வில்லை.  இதே நிலையில் இவ்­வ­ரு­டமும் இந்த நல்­லாட்­சி­யிலும் நாம் பொறுத்து சட்­டத்தை மதித்து இருக்க முடி­யாது என வாதிட்­டனர். இந்­நி­லையில் அங்கு வரு­கைதந்­தி­ருந்த  பொலிஸ் அதி­காரி இனி அவ்­வாறு இடம்­பெ­றாது. 

வரும் செவ்வாய் கிழமை நீங்கள் மீள வயல் வேலை செய்­யலாம். என்று கேட்டுக்கொண்டதோடு, கலைந்து செல்­லு­மாறு வேண்­டினார். இந்­நி­லையில் பொலிஸ் உய­ர­தி­கா­ரியின் கருத்தை மதித்து தாம் தற்­கா­லிக மாக வேலையை இடை நிறுத்­தி­ய­தாக குறிப்­பிட்­டனர். சுமார் நண்பகல் 12.15 மணி­ய­ளவில் பதற்ற நிலைமை முடி­வுக்கு வந்­தது. உழவு இயந்­தி­ரத்தில் வந்­த­வர்கள் பெட்­டியில் கம்­பு­த­டி­க­ளுடன் வந்­தி­ருந்­த­தையும் பொலி­ஸா­ருக்கு தாம் சுட்­டிக்­காட்­டி­ய­துடன், இக்­கா­ணிகள் கடந்த 1970 ஆண்­டு­களில் இருந்து செய்கை பண்ணி வரு­வ­துடன் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக குறித்த  வேறு பிர­தேச மான தெகி­வத்­தையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரது குடும்­பத்­தி­னரால்  அத்துமீறி அமை­தி­யின்­மை­யும் ஏற்பட்டு வரு­வ­தாக விவ­சா­யிகள் அங்கு வந்த பொலிஸ்­அ­தி­கா­ரி­க­ளிடம் சுட்­டிக்­காட்­டினர். பல விவ­சா­யிகள் தாக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பொலிஸில் முறை­யிட்­டி­ருந்தும் எவரும் கைதா­க­வில்லை. 

இதனால் பொலி­ஸாரை நம்­ப­மு­டி­யாது எனவும்  குறிப்­பிட்­டனர்.இப்­ப­கு­தியில் ஏலவே இரண்டு குளங்­க­ளிலும் நீர்­தேங்கும் பகு­தியில் அத்துமீறல் இடம்பெறுவதாகவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.
« PREV
NEXT »

No comments