Latest News

April 18, 2016

தேசிய பாதுகாப்பில் ஓட்டை விழுந்துவிட்டதாம் தயான் ஜயதிலக விளக்கம்
by admin - 0

தேசிய பாது­காப்பில் ஓட்டை ஏற்­பட்­டுள்­ளதை தற்­கொலை அங்கி கண்­டு­பி­டிப்பு வெ ளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.இது தொடர்­பாக கலா­நிதி தயான் ஜய­தி­லக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

தற்­கொலை அங்கி கண்­டு­பி­டிப்பு தொடர்­பான சம்­ப­வத்தை சர்­வே­தச அனு­ப­வங்கள் நடப்­புகள் மூலம் நோக்­கும்­போது ஒரு விட­யத்தை குறிப்­பி­டலாம். அதா­வது பிர­பல்­ய­மான பயங்­க­ர­வாத இயக்­க­மொன்று தோல்வி கண்ட பின்னர் முன்­பி­ருந்த பெய­ரிலோ தலை­தூக்­கலாம். இதற்கு சிறந்த உதா­ரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்­பாகும். பல வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தாக இந்த இயக்கம் வட ஆபி­ரிக்­காவில் அல்­கைதா அமைப்­பாக செயற்­பட்­டது. இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­பாக மாறி­யுள்­ளது.

புலிகள் இயக்கம் தோல்­வியை கண்­டது. ஆனால் அதி­லி­ருந்து தப்பிச் சென்ற பெரும்­பா­லானோர் மேற்­கத்­தேய நாடு­க­ளிலும், தென்­னிந்­தி­யா­விலும் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். இவர்கள் அனை­வரும் புலி­க­ளாக செயற்­ப­டாமல் இருக்­கலாம். ஆனால் சர்­வ­தேச புலி­களின் வலைப்­பின்­னலில் சில காலங்கள் இணைந்­தி­ருந்­த­வர்கள். எனவே மீண்டும் புலி­களின் செயற்­பா­டுகள் தலை­தூக்க இட­முள்­ளது.

கடந்த ராஜ­பக் ஷ ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்கில் தேசிய பாது­காப்பு பாது­காக்­கப்­பட்­டது. எனவே புலிகள் தலை­தூக்க முடி­யாமல் போனது. அந்த பிர­தே­சங்­களில் படை­யினர் மற்றும் உளவுப் பிரி­வினர் அதிகம் மக்­க­ளுடன் மக்­க­ளாக இருந்­தனர். எனவே புலிகள் முயற்­சித்­தாலும் அவர்­களால் தலை­தூக்க முடி­ய­வில்லை.

ஆனால் புதிய அர­சாங்­கத்தில் வடக்கு, கிழக்கின் பாது­காப்பில் ஓட்டை ஏற்­பட்­டுள்­ளது. குழப்­ப­க­ர­மான சூழ்­நிலை தலை­தூக்­கி­யுள்­ளது என்றே கூற வேண்டும்.

இந்த ஓட்டை ஊடா­கவே சாவ­கச்­சேரி, மன்னார் சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யுள்­ளன. ஒரு­பி­ரி­வினர் இதன்­மூலம் புலி­களின் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லொன்­றுக்கு தயா­ரா­வது புலப்­ப­டு­கின்­றது. இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு எது­வு­மில்லை.
சர்­வ­தேச ரீதி­யிலும் தமிழ் நாட்டில் எஞ்­சி­யுள்ள புலிகள் அமைப்பின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்கும். இதனை ஆள­மாக ஆராய்ந்தால் புலி­களின் இலக்கு அரச தரப்பில் எவ­ரையும் இலக்கு வைத்த­தாக அமை­யாது.
மேற்­கத்தேய நாடு­களின் நண்­ப­னான அரசின் மீது தாக்­குதல் நடத்­தினால் மேற்­கு­லத்தின் கடும் போக்­கிற்கு ஆளா­கலாம் என்­பதை புலிகள்அறிவார்கள். எனவே இதற்கு புலிகள் தயாராக மாட்டார்கள்.

இதனால் புலிகளின் இலக்கு மஹிந்த ராஜ பக் ஷவும் கோத்தபாய ராஜபக் ஷவாகவே இருக்கும். இதனை வெற்றிகரமாகா நிறை
வேற்றினால் புலம்பெயர் புலிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments