ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த வாரம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விற்கும் இடையில் பிரதமரின் சீன விஜயத்திற்கு முன்னர் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது சில இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அரசியல் விவகாரங்களில் ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். சீனாவுடனான உறவுகள் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன தொடர்பில் சில இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
அதே சமயம் இனப்படுகொலை சம்பந்தமாக வரும் குற்றச்சாட்டுக்களை இருவரும் இணைந்து எதிர்கொள்ளும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

No comments
Post a Comment