Latest News

April 08, 2016

தமிழ் இனத்துரோகிகளுக்கு ஶ்ரீலங்கா அரசின் பதிலடி
by admin - 0

யாழில் ஒரு ஹோட்டலுக்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து. நாம்( 5 பேர் கொண்ட ராணுவ புலனாய்வு குழு) சென்றோம். 


கைத்துப்பாக்கி இடுப்பில் தெரியும்படியாக ஒரு நபர் ஹோட்டலுக்குள் உட்கார்ந்து இருந்தார். அவரை நாம் மிகவும் அவதானமாக அணுகி கைகளை பிடித்து இறுதியில் கைதுசெய்தோம். அவர் வேறு யாரும் இல்லை ஈ.பி.டி.பி குழுவின் முக்கியஸ்தர் விமலதாஸ் தான் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள். 


2013ம் ஆண்டு மகிந்த ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தான் விமலதாஸ் கைதாகியுள்ளார். இவர் கொழும்பு ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ் பலாலி விமான நிலையத்திற்கு பயணித்தவேளை, தன்னுடன் ஒரு பிஸ்டலை கொண்டுசென்றுள்ளார். 

அதற்கான அனுமதிப் பத்திரத்தை அவர் பாதுகாப்பு அமைச்சு(கோட்டபாயவின் கீழ் இயங்கிய)  பெற்றுள்ளார். அதற்கான சான்றை அவர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். ஆனால் மற்றுமொரு சான்றிதழை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுளது. அதில் குறித்த துப்பாக்கி இலங்கைக்கு வெளியே மட்டும் தான் பாவிக்கலாம் என்றும். 

அது இலங்கை துப்பாக்கி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் யாழ் நீதிமன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி இளஞ்செழியன், இது எவ்வாறு சாத்தியம் ? இதில் எது உண்மையானது என்று கண்டறியுமாறு உத்தரவிட்டார். ஆனால் மேலும் குழப்பம் தான். ஏன் என்றால் இந்த இரண்டு மாறுபட்ட கடிதங்களும் நிஜமானவையே. துப்பாக்கியை 2013ல் கொழும்பில் இருந்து கொடுத்து அனுப்பிய கோட்டபாய. வேலை முடிந்த உடனே அவரை கைதுசெய்ய வைத்துள்ளார்.

அதுபோக தாம் ஏற்கனவே வழக்கிய அனுமதிப் பத்திரித்தை, தாமே ரத்தும் செய்துள்ளார். யாரையோ போட்டுத் தள்ள விமலதாஸை பாவித்துவிட்டு. காரியம் முடிந்தபின்னர் அவரைக் காய்வெட்டியுள்ளார்கள் இவர்கள். தற்போது 3 வருடங்களாக சிறையில் உள்ள , விமலதாஸால் , தன்னிடம் இருந்த துப்பாக்கி அனுமதி பெறப்பட்ட துப்பாக்கி தான் என்பதனை நிரூபிக்க முடியாமல் உள்ளது. மகிந்த கும்பலை நம்பி அவர்களோடு இணைந்து வேலைசெய்த பல நாதாரிகள் தற்போது இப்படி தான் பெரும் , பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறார்கள். இதில் கருணாவும் அடங்கும். 

« PREV
NEXT »

No comments