வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் இன்று இரவு (ரயில் )தொடரூந்து மோதி ஒருவர் பலியாகியுள்ளார்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் இன்று மாலை குருமன்காடு காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்தள்ளார்.
45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு உயிரிழந்த போதும், அவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை.
இந் நிலையில் புகையிரதம் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு இறந்தவரின் சடலம், புகையிரத்தில் ஏற்றி வவுனியா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி சென்றது.
இதேவேளை, இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில், சடலம் வவுனியா பொது வைத்தியாசலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment