Latest News

April 09, 2016

தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.
by admin - 0

அரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும் முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் குறித்த பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்னரே கிளிநொச்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் சிலவற்றினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையால் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் மீது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையீனமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளதாகப் பலராலும் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் கல்வி நிலையங்கள் தமது கல்வி நிலையங்களுக்கு மாணவர்களை அதிகளவில் உள்ளீர்ப்பதற்காக அரச பாடசாலைகளில் நடைபெறும் முக்கிய பரீட்சைகளுக்குரிய வினாத்தாள்களை பணம் கொடுத்து வாங்கி இந்தப் பரீட்சையில் இந்த வினாத்தாள்தான் வரும் என்று கூறி மாணவர்களிடம் வழங்கி அதிக பணம் பெற்று பிழைப்பு நடத்துகின்றார்கள்.

மேற்படி க.பொ.த. உயர் தரப் பரீட்சை வினாத்தாள்களை தொண்டமானாறு வெளிக்கள் நிலையத்திற்குப் பரீட்சை வினாத்தாள்களைத் தயாரித்து வழங்கிய ஆசிரியர்களால் கிளிநொச்சியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகியும் வர்த்தக பாட ஆசிரியருமான என்பவரிடம் பணத்திற்காக வழங்கப்பட்டு மாணவர்களிடம் பணம் கறக்கப்பட்டுள்ளது.

இதேபோலத்தான் கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையத்தை நடத்திவரும் நபரொருவர் தான் வறிய மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி பண வசூலிப்பு நிதியம் ஒன்றினை நடத்தி வருவதுடன் வெளிநாட்டுத் தனவந்தர்களிடம் ஏழை மாணவர்களுக்கான உதவி என்னும் போர்வையில் பெருமளவான நிதியைப் பெற்று தான் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இதற்குக் கல்வி உயரதிகாரிகளும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிவருகின்றார்கள். அரைவாசி பணம் அவர்களுக்குத்தானாம்.
« PREV
NEXT »

No comments