Latest News

April 06, 2016

காரை சுற்றி டிசேபிள் கோடு போட்டு: 110 பவுண்டு டிக்கெட்டை வைத்த கவுன்சில்
by admin - 0

லண்டன் நோர்வுட் பகுதியில் வசிக்கும் ஆம்ஸ்ராங் என்னும் நபர் தனது காரை, வீட்டுக்கு முன்னால் பார்க் செய்துவிட்டு தூங்கி. அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது திகைத்து விட்டார். அவர் காரை பார்க் செய்த இடத்தை சுற்றி டிசேபிள் கோட்டை போட்டு. அது ஊனமுற்றோர் பார்க் செய்யும் இடம் என இரவோடு இரவாக அறிவித்தது மட்டுமல்லாது. தண்டப்பணமாக 110 பவுண்டுகளை கட்டவேண்டும் என்று வேறு டிக்கெட் வைத்துச் சென்றுவிட்டார்கள் கவுன்சிலில் வேலைசெய்யும் நபர்கள். 

அன்றைய தினம் 1ம் திகதி ஏப்பிரல் என்றபடியால். தன்னை முட்டாளாக்கவே யாரோ செய்திருக்கிறார்கள் என்று முதலில் ஆம்ஸ்ராங் நினைத்துள்ளார். ஆனால் பின்னர் தான் அது உண்மை என்று அவர் அறிந்துகொண்டார். கவுன்சிலுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்தால், அவர்கள் எதனையும் சொல்லவில்லை. பின்னர் உட்கார்ந்து யோசித்த அவருக்கு ஒரு விடையம் புரிந்தது. ஆம்ஸ்ராங் இந்த வீட்டை புதிதாக வாங்கி இருக்கிறார். ஆனால் முன்னர் அந்த வீட்டில் இருந்த வயதான அம்மா ஒருவர். தனது கணவர் ஊனமுற்றவர். எனவே தனக்கு ஊனமுற்றோர் பாக்கிங் இடம் தேவை என்று தொடர்ச்சியாக கவுன்சிலிடம் கோரி வந்துள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக அந்த வசதியை செய்து கொடுக்கவில்லை.

இறுதியாக கணவர் இறந்த நிலையில் வீட்டை விற்றுவிட்டு அந்த அம்மா சென்றுள்ள நிலையில். தற்போது கவுன்சில் காரர்கள் வந்து குறித்த இடத்தில் (கார் பார்க் செய்யப்பட்ட இடத்தை) டிசேபிள் கோடுகள் போட்டு மார்க் செய்து சென்றுவிட்டார்கள். இதேவேளை அங்கே வந்த டிக்கெட் வைக்கும் நபர் டிசேபிள் பார்கிங்கில் வேறு யாரோ காரை பார்க் செய்துள்ளதாக நினைத்து அவர் பங்கிற்க்கு டிக்கெட்டை வைத்துச் சென்றுள்ளார். இது தான் நடந்துள்ளது. 
« PREV
NEXT »

No comments