Latest News

March 24, 2016

போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு பலரிடமும் பணம் பறிக்கிறார் வீரலட்சுமி என்ற பெண்
by admin - 0

போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொண்டு பலரிடமும் பணம் பறிக்கிறார் வீரலட்சுமி என்ற பெண். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள், என்று தெரிவித்துள்ளார் தமிழ் ராஜேந்திரன் என்ற வக்கீல்.
 

அவர் மேலும் தெரிவிக்கையில்


தமிழர் முன்னேற்ற படை என்ற பெயரில் இயங்கும் வீரலட்சுமி என்ற பெண் சிறு சிறு தமிழர் ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதை கண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நான் வரச்சொல்லி, பழ.நெடுமாறன் ஐயாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

 தொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டி வந்தேன். இப்போது பீப் பாடல் விவகாரத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக , சிம்புவை ஆதரித்து எனது குழுவில் அவர் பதிவு போட்டதைக் கண்டு, அதிர்ந்து போய், அவரை திருத்த இக்குழுவினருடன் சேர்ந்து அறிவுரை கூறிப் பார்த்தும் பயனில்லை என தெரியவந்தது. 

சென்ற வாரம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய எமி ஜாக்சனை எந்திரன் 2 படத்திலிருந்து நீக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து, அதற்காக இரண்டு பேருந்து வாடகைக்கு எடுக்க வேண்டும்.அதற்காக பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என என்னிடம் கேட்டு, வங்கி எண் அனுப்பினார். 

நான் யோசித்து அந்த செய்தியை பகிர்ந்தேன். இதற்கிடையே, அவர் இதே போல கோரிக்கை வைத்து தமிழர் நலம் பேரியக்க தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களிடம் 10,000 க்கு காசோலை பெற்று, அதைப் பயன்படுத்தி ஒரு பைக் வாங்கிவிட்டதாகத் தெரிந்துவிட்டது. மேலும் எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தை சொல்லி பத்தாயிரம் , பத்தாயிரமாக கறந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது. மேலும் அவர் சொன்னபடி முற்றுகையும் நடத்தவில்லை. 

முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார். இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கறப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது. சிம்பு வீட்டாரிடம் தொகை பெற்றுக்கொண்டு பீப் பாடலை ஆதரிக்கிறாரோ என கடும் ஐயம் எழுகிறது.... 

இவரிடம் இனி எச்சரிக்கையாக இருங்க மக்கா..." -இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தனது சொத்துக்களை விற்றுதான் போராட்டங்கள் நடத்துவதாக வீரலட்சுமி சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அவர் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது


« PREV
NEXT »

No comments