Latest News

March 27, 2016

சம்பூர் அனல்மின்நிலைய நிர்மாணத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு தயார் மக்கள் ஏற்காத எந்தவிடயத்தையும் அனுமதியோம்; எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் திட்டவட்டம்
by admin - 0

சம்பூர் அனல்மின் நிலையத்தினால் மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­மென கரு­தினால் அதை நிர்­மா­ணிப்­பது பற்றி மீள்­ப­ரி­சீ­லனை செய்வோம். இந்த விடயம் தொடர்பில் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி முடிவு எடுக்கக் காத்­தி­ருக்­கிறேன் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

சம்பூரில் உயர்­பா­து­காப்பு வல­ய­மாக கடற்­ப­டை­வ­ச­மி­ருந்த 177 ஏக்கர் காணிகளை கைய­ளிக்கும் வைபவம் நேற்று சம்­பூரில் அர­சாங்க அதிபர் என்.புஷ்­ப­கு­மார தலை­மையில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரை­யாற்றும்போதே சம்­பந்தன் எம்.பி.மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், சம்பூர் அனல்மின் நிலையம் சம்­பந்­த­மாக பல்­வேறு சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன. கண் ட­னங்­களும் விமர்­ச­னங்­களும் வந்த வண்ணம் உள்­ளன. தினந்­தோறும் தொலை­பேசி மூலம் சம்பூர் அனல்மின் நிலைய த்தை நிறு­வ­வேண்­டா­மென மக்கள் எனக்கு கூறி­வ­ரு­கி­றார்கள். இந்த விடயத்தில் மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாம் அனுமதிக்கப் போவ­தில்லை.

சம்பூர் அனல்மின் நிலை­யத்­தினால் மக் கள் பாதிப்­ப­டை­வார்கள், அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­மெனக் கரு­தப்­பட்டால் அதனை நிறு­வு­வது தொடர்பில் நான் மீள் பரி­சீ­லனைச் செய்யத் தயா­ராக இருக்­கின்றேன். மக்கள் ஏற்­றுக்­கொள்­ளாத எந்­த­வொரு விட­யத்­தையும் நாம் செய்யப் போவ­தில்­லை­யென உறு­தி­கூற விரும்­பு­கின்றேன்.

அனல்மின் நிலையம் அமை­யப்­பெ­று­வ­தனால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வுகள் பற்றி இரு­வ­கைப்­பட்ட பாதிப்­புக்கள் எடுத்துக் கூறப்­ப­டு­கின்­றன.
கரித்­தூ­சி­யினால் ஏற்­படும் விளை­வுகள் இரண்­டா­வது சாம்பல் பறப்­ப­தனால்
ஏற்­படும் பாதிப்­புகள் பற்றி எடுத்துக் கூறப்­ப­டு­கின்­றன. மக்­களைப் பாதிக்கும் எந்த முடி­வையும் நான் எடுக்­க­மாட்டேன். அந்த வகையில் சம்பூர் மக்­க­ளு­டனும் எனது மாவட்ட மக்­க­ளு­டனும் நிபு­ணர்­க­ளு­டனும் கலந்து பேசி விரைவில் ஒரு முடிவு எடுப்பேன் என உறு­தி­யாகக் கூறி கொள்­கிறேன்.

பலர் கரு­து­கி­றார்கள் சம்­பந்தன் நினைத்தால் அனல்மின் நிலையப் பிரச்­சினை தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யுடன் பேசலாம், பிர­த­ம­ருடன் பேசலாம், சம்­மந்தன் நினைத்தால் பார­தப்­பி­ர­மதர் நரேந்­தி­மோ­டி­யுடன் கதைத்து அனல்மின் நிலையம் அமைப்­பதை தடுத்து நிறுத்­த­லா­மென்று, நான் எப்­பொ­ழுதும் எனது மக்­களை கைவி­ட­மாட்டேன்.

நுரைச்­சோ­லையில் ஒரு அனல்­மின்­நி­லையம் அமைக்­கப்­பட்­ட­போது அதை பலர் கடு­மை­யாக எதிர்த்­தார்கள். பின்பு பார்த்தால் அதை எதிர்த்­த­வர்­களே அதில் கட­மை­யாற்­று­கின்­றார்கள் என்ற செய்­தியை என்­னிடம் தெரி­வித்­தார்கள்.

நாங்கள் எப்­பொ­ழுதும் வன்­மு­றை­வா­தி­க­ளாக இருக்­கக்­கூ­டாது, வன்­மு­றை­களைக் கைவிட்டு சமத்­து­வ­மான வாழ்வு முறையை நாம் வாழப் பழகிக் கொள்­ள­வேண்டும். வன்­மு­றைகள் எப்­பொ­ழுதும் எமக்கு நன்மை தரப்­போ­வ­தில்லை. வன்­முறை மூலம் சட்­டத்தை மீற நாம் எத்­த­னிக்கக் கூடாது. நாம் அனை­வரும் சமத்­து­வ­மான வாழ்வை வாழப்­ப­ழக வேண்டும். தற்­பொ­ழுது அந்த சூழ் நிலை தோன்­றி­யுள்­ளது என்­பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சம்பூர் விடு­விக்­கப்­ப­டுமா? அங்கு மீண்டும் மக்கள் குடி­யே­று­வார்­களா என்ற சந்­தே­கங்கள் மக்கள் மத்­தியில் நில­வி­யி­ருந்­தன. ஆட்சி மாற்­றத்தின் கார­ண­மாக பொரு­ளா­தார வல­யத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட 818 ஏக்கர் நிலம் கடந்த வருடம் ஆவணி மாதம் மக்­க­ளுக்­காக விடு­விக்­கப்­பட்­டது. இன்று உயர்­பா­து­காப்பு வல­ய­மாக இருந்த மக்­க­ளுக்கு சொந்­த­மான 177 ஏக்கர், காணி, பாட­சா­லைகள், பொதுக்­கட்­டி­டங்கள், குடி­யி­ருப்­புக்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. 237 ஏக்கர் உயர்­பா­து­காப்பு வலயப் பிர­தே­சத்தில் ஏலவே இரு­பது, இரு­ப­தாக 60, ஏக்கர் நிலம் விடு­விக்­கப்­பட்டு இன்று 177 ஏக்கர் நிலம் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மாற்­றத்­துக்கு கார­ண­மான ஜனா­தி­பதி, பிர­தமர், மீள்­கு­டி­யேற்ற அமைச்சர், படைத்­த­ள­ப­திகள், கிழக்­கு­மா­காண ஆளுநர் அனை­வ­ருக்கும் நன்றி கூறக்­க­ட­மைப்­பட்­டுள்ளேன். எனத் தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் பாது­காப்பு செயலாளர் கே.ஹெட்டியாராட்சி படையினர் வசம் இருந்த 177 ஏக்கர் காணிகளுக்குரிய பத்திரங்களை அரசாங்க அதிபர் புஸ்பகுமாரவிடம் கையளித்தார். பாடசாலைகளுக்குரிய பத்திரங்கள் கிழக்கு மாகாண கல்வி மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம் கையளிக்கப்பட்டது. ஆலயங்களுக்குரிய பத்திரங்களை அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையிலான குழுவினர் ஆலயபரிபாலன சபையினரிடம் ஒப்படைத்தனர்.
« PREV
NEXT »

No comments