Latest News

March 14, 2016

நீதிக்கான வேட்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் : ஜெனீவாவில் தீவிர செயல்முனைப்பு !
by Unknown - 0

ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கான பயணத்தின் ஓர் அங்கமாக தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையின் 31வது கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர செயல்முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்தினை மையமாக கொண்டு, நாடுகடந்த தமிழீ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்நாட்டு நிபுணர் குழுவின் நீதிபொறியமைவுக்கான செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

பொறுப்புடமை மற்றும் அவதானிப்புக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் கையேடு, தமிழ்பெண்கள் எதிர்கொள்கின்ற சாவால்களை மையப்படுத்தி கையேடு, பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கை ஆகியன இக்கூட்டத் தொடரில் வெளியிட்டு வைக்கப்பட்டதாக நா.த அரசாங்கத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் மணிவண்னன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னராக, பல்வேறு உலக நாடுகளும் தங்களது நலன்களின் அடிப்படையில் சிறிலங்கா விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றன.

சிறிலங்காவின் நல்லாட்சி எனும் மாயைக்குள் பல்வேறு நாடுகள் மட்டுமல்ல பல்வேறு அமைப்புக்களும் விழுந்து விட்டன என்ற குற்றசாட்டுக்கள் பலமாக முன்வைக்கப்பட்டும் சுட்டிக்காட்டப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் சிறிலங்காவை மையப்படுத்திய ஐ.நா மனித உரிமைச்சபையின் இறுதித்தீர்மானம், ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியினைப் பெற்றுத்தராது என்பதனை ஏலவே தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இவ்விவகாரத்தில் பன்னாட்டு நிபுணர் குழுவினை நியமித்து சிறிலங்காவின் நடைப்பாடுகளை கண்காணித்து அதனை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு, ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கான வேட்கையில் உறுதியாக இருக்கின்றது.

« PREV
NEXT »

No comments