Latest News

March 23, 2016

இது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர்.... சீமான்
by admin - 0

தஞ்சாவூர்: தற்போதைய சட்டசபைத் தேர்தல் என்பது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியுள்ளார்.

சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர். அங்கு பெரியகோவிலில் சிவன் வழிபாடு நடத்தி தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார் சீமான்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். சீமான் பேச்சிலிருந்து...


வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது. நாங்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.


திமுகவுடன் கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்காக அவர்கள் எதிர்பார்த்தது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது. அதுதான் எதார்த்த உண்மை.

தத்துவம் சாகுதோ, கொள்கை சாகுதோ அன்றுதான் பணத்தை நம்புபவர்கள் கூட்டணி அமைத்தாவது ஜெயித்துவிடமாட்டோமா என்று நினைப்பார்கள். எங்களுக்கு தத்துவம், கொள்கை இருக்கிறது. அதனால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் அவரும் தனித்து போட்டியிடுவதற்கு பயப்படுகிறார். மக்களோடு சேர்ந்து தனியாக நின்று போட்டியிடுகிறோம். கொள்கை, நோக்கத்தின் அடிப்படையில் இணைந்து செயல்படுவது போய்விட்டது.

அன்புமணி வருவதில் என்ன தப்பு விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவோ, முதலமைச்சராகவோ வரும்போது, அன்புமணி ராமதாஸ் வருவதில் என்ன தப்பு இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் வரட்டும், நான் வருவேன் என்று நம்புகிறேன். யார் நல்ல ஆட்சி தருகிறார்கள் என்று பார்ப்போம்.

மக்களுக்குள் நீணடகாலமாக மாற்றத்திற்கான விதை விழுந்து விட்டது. தனித்து நின்று தோற்றுப்போனாலும் மீண்டும், மீண்டும் நிற்பார்கள். நாம் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற நம்பிக்கையை தராமல் போனதுதான் திராவிட கட்சிகளுக்கு பலமாக போய்விட்டது. அப்படியிருந்தால் என்றோ திராவிட கட்சிகளை தூக்கி எறிந்திருக்கலாம்.

பன்னெடுங்காலமாக தமிழர் அரசியலை, அதிகாரத்தை கெடுத்து நாசமாக்கிய திராவிட ஆட்சி முறையை அப்புறப்படுத்திடும் போர் இது.

முன்னதாக தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை ராஜராஜ சோழனின் சிலையின் பாதத்தில் வைத்து சீமான் ஆசி பெற்றார்.



« PREV
NEXT »

No comments