Latest News

March 12, 2016

வட கொரி­யா­வி­லுள்ள ஒரு புல்­லுக்­கா­வது தீங்கு ஏற்­ப­டு­மானால் உட­ன­டி­யாக அணு ஆயுதத் தாக்­குதல் நடத்­தப்­படும்
by admin - 0

வட கொரியத் தலைவர் கிம் யொங் –உன் மேலும் அணு­சக்திப் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள உத்­த­ர­விட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தது.

தென் கொரிய மற்றும் அமெ­ரிக்கப் படை­யினர் பாரிய இரா­ணுவ பயிற்சி நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தது முதற்­கொண்டு பிராந்­தி­யத்­தி­லான பதற்ற நிலை அதி­க­ரித்­துள்­ளது.
கிம் யொங் – உன் ஏவு­க­ணையில் பொருத்­தக்­கூ­டிய சிறிய அணு ஆயு­தங்­களை தனது நாட்டு விஞ்­ஞா­னிகள் விருத்தி செய்­துள்­ள­தாக உரிமை கோரி அத்­த­கைய ஆயு­த­மொன்றை அவர் பார்­வை­யி­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யா­ன­மைக்கு ஒரு சில தினங்­க­ளி­லேயே இந்த பத்­தி­ரிகைச் செய்தி வெளி­யா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் புதி­தாக விருத்தி செய்­யப்­பட்­டுள்ள அணு ஆயு­தங்­களின் அழிவுச் சக்­தியை மதிப்­பிட அவற்றை வெடிக்க வைத்து பரி­சோ­தனை செய்­வ­தற்கு கிம் யொங் உன் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக வட கொரி­யாவின் உத்­தி­யோ­க­பூர்வ அர­சாங்க ஊட­க­மான 'கே.சி.என்.ஏ. ' குறிப்­பிட்­டுள்­ளது.
முதல் நாள் வியா­ழக்­கி­ழமை வட கொரி­யாவால் ஏவிப் பரி­சோ­திக்­கப்­பட்ட இரு ஏவு­க­ணை­களும் அணு ஆயுத தாக்­குதல் பயிற்­சியின் ஒரு அங்­க­மா­கவே ஏவப்­பட்­ட­தாக அந்த ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.
வட கொரி­யாவால் விருத்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் ஏவ­க­ணை­களில் பொருத்­தப்­படக் கூடிய அணு ஆயு­தங்கள் அயல்நாடான தென் கொரியா மற்றும் பிராந்­திய நாடு­க­ளுக்கு மட்­டு­மல்­லாது அமெ­ரிக்­காவின் பிர­தான நிலப் பகு­திக்கும் அச்­சு­றுத்­த­லா­க­வுள்­ளன.

புதிய அணு ஆயுதப் பரி­சோ­த­னை­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்ள கிம் யொங் – உன், தென் கொரிய- – அமெ­ரிக்க இரா­ணுவப் பயிற்­சியின் போது தனி­யொரு மரத்­துக்­கா­வது புல்­லுக்­கா­வது தீங்கு ஏற்­ப­டு­மாயின் அந்­நா­டுகள் மீது உட­ன­டி­யாக அணு ஆயுதத் தாக்­குதல் நடத்­தப்­படும் என அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.

மேலும் அணு­சக்தி பரி­சோ­த­னை­களை நடத்­து­வ­தற்கு கிம் யொங் – உன்னால் வழங்­கப்­பட்­டுள்ள இந்த உத்­த­ரவு குறித்து தென் கொரியா விப­ரிக்­கையில், இது சர்­வ­தேச அபிப்­பி­ரா­யத்தை வட­கொ­ரியா அலட்­சியம் செய்து வரு­வதை எடுத்துக் காட்­டு­வ­தாக உள்­ளது என குறிப்­பிட்­டுள்­ளது.

“சர்­வ­தேச சமூகம் வட கொரியா மீது பல­மான தடை­களை விதித்து வரு­கின்ற நிலையில், அந்தத் தடை­களின் அவ­சியம் குறித்து அதன் இந்த பிந்­திய செயற்­பா­டுகள் நிரூ­பிப்­ப­ன­வாக உள்ளதாக தென் கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஜியோங் ஜூன் ஹீ தெரிவித்தார்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட கொரியா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments