Latest News

March 21, 2016

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமில்லை
by admin - 0

உள்­நாட்டு விட­யங்கள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ர­ணைக்கு எனது உடன்­பாடு கிடை­யாது. மீள் குடி­யேற்றம் காணா­மல்­போனோர் தொடர்­பான விசா­ரணை, நீதித்­து­றையின் சுயா­தீனம் என்ற மூன்று விட­யங்கள் தொடர்­பி­லேயே இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் என்­னிடம் வலி­யு­றுத்­தினார் என ஜனா­தி ­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

வாத்­துவ "புளூ­வோட்டர்" ஹோட்­டலில் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தேசிய சட்ட மாநாட்டை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் அண்­மையில் இலங்­கைக்கு வந்தார். அவர் என்னை சந்­தித்­த­போது, மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்தார். முத­லா­வ­தாக இடம்­பெ­யர்ந்து முகாம்­களில் வாழும் மக்­களை விரைவில் விடு­வித்து அவர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்கு அவர்­க­ளது காணிகள் மீளக் கைய­ளிக்­கப்­பட்டு மீள் குடி­யேற்றம் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இரண்­டா­வ­தாக காணா­மல்­போனோர் தொடர்­பான விசா­ரணை துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மூன்­றா­வ­தாக எமது நாட்டின் நீதித்­து­றையை பலப்­ப­டுத்தி சுயா­தீ­ன­மாக்க வேண்டும். இவை மூன்றும் உத்­த­ர­வுகள் அல்ல கோரிக்­கை­களே ஆகும்.

மனித உரிமை மீறல் தொடர்­பாக சர்­வ­தே­சத்தின் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக எதிர்­கா­லத்தில் நடை­பெ­ற­வுள்ள விசா­ர­ணை­க­ளிலும், அதன்­பின்­ன­ரான நீதித்­துறை நட­வ­டிக்­கை­க­ளிலும் வெ ளிநாட்டு நீதி­ப­தி­களை நாட்­டுக்குள் கொண்டு வரு­வது தொடர்பில் எனக்கு இணக்­கப்­பாடு கிடை­யாது.

எமது நாட்டின் நீதி­ப­திகள் மற்றும் நீதித்­துறை தொடர்­பாக நம்­பிக்கை உள்­ளது. நீதித்­து­றையை பக்­கச்­சார்­பில்­லாமல் சுயா­தீ­ன­மாக்க வேண்­டி­யதே எமது பொறுப்­பாகும். இதுவே எமது அரசின் திட்­ட­மாகும். எமது நீதித்­து­றையில் சேவை­யாற்­று­வர்கள் தொடர்பில் காலத்­திற்கு காலம் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. நீதி­ப­தி­களின் வீடு­க­ளுக்கு கல்­லெ­றிந்­தார்கள், இன்­னொரு காலத்தில் நீதி­ப­திகள் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

அண்­மைக்­கா­லத்தில் முன்னாள் நீதி­ய­ரசர் 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்டார். கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் நீதித்­துறை மீதான தலை­யீ­டு­களை புதிய ஆட்­சியில் உள்ளோர் நன்­க­றி­வார்கள். இன்று நாட்டின் நீதித்­துறை சுதந்­தி­ர­மாக இயங்க இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எந்­த­வி­த­மான அழுத்­தங்­களும் இன்­றில்லை.

நீதித்­துறை மீது அர­சியல் அழுத்­தங்கள் கொடுப்பதென்பது மிலேச்சத்தனமான செயற்பாடாகும் என்பதே எனது கருத்தாகும். நீதித்துறையின் காலதாமதத்தை நீக்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவது தொடர்பில் பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உடனடியாக தீர்மானங்கள் எடுக்கப்படும் என் என்றார்.
« PREV
NEXT »

No comments