Latest News

March 04, 2016

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருடன் MAP பற்றிய ஊடக சந்திப்பும்
by admin - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் ‘பொறுப்புடமை கண்காணிப்புக் குழு’ MAP பற்றிய தெளிவை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பணிமனையால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று பெப்ரவரி 28ந் திகதி காலை நடாத்தப்பட்டது. இதில் ரொறொன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல முன்னணி ஊடகவியலாளர்கள், பலராலும் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் எம்மால் அழைக்கப்பட்டிருந்த சில சமூக நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவரான திரு ஜோ அன்ரனியின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதமர் பணிமனை கனடா பிரதிநிதியும் MAP வேலைத்திட்டத்திட்கு பொறுப்பாளருமான திரு ஞானேஸ்வரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் skype மூலம் கலந்துகொண்டு MAP பற்றிய விரிவான விளக்கம் அழித்ததோடு சபையோரின் கேள்விகளுக்கு சிறந்த பதில்களும் அளித்தார். 


அவரின் ஆழ்ந்த துறைசார் அறிவும் MAP பற்றிய தெளிவும் கலந்துகொண்டோருக்கு மிகவும் திருப்தியளித்தது. உதவிப் பிரதமரும், MAP இற்கு எல்லா நாடுகளிட்கும் பொறுப்பாளருமான திரு.தவேந்திரராசா அவர்களும் skype மூலம் கலந்துகொண்டார்.

இக் கண்காணிப்புக்குழுவின் முயற்சியை வெற்றிபெறச் பெறச் செய்வது ஒட்டுமொத்த தமிழினத்தின் இன்றைய தலையாய கடமையாகும் எனபதையும் இதை நிறைவேற்ற பெருமளவு நிதி தேவைப்படுவதால் எமது பங்களிபபை முன்வந்து கொடுத்துதவுமாறும் திரு அன்டன் றெஜி அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். 


ஊடக ஒருங்கிணைப்பாளர் சாந்தினி சிவராமன் நிதிப்பங்களிப்பு செய்யக்கூடிய வழிவகைகளை விளக்கியதோடு ஈற்றில் வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கும் இந் நிகழ்வை நாடாத்துவதற்கு பலவழிகளிலும் உதவியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments