Latest News

March 12, 2016

பா. உ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் நேற்று வியாழக் கிழமை (10.03.2016) அன்று பாராளமன்றத்தில் காணாமல்போனோர் தொடர்பாக ஆற்றிய உரை
by admin - 0

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் நேற்று வியாழக் கிழமை (10.03.2016) அன்று பாராளமன்றத்தில் காணாமல்போனோர் தொடர்பாக ஆற்றிய உரை பின் வருமாறு.
 
நேற்று முன்தினம் காணாமல்போனோர் தொடர்பான விவாதம்இங்கு நடைபெற்றது. அந்த நேரத்தில் பேசுவதற்கு எனக்குச்சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனவே, இந்த நேரத்தில் இந்தஅவையிலே எமது காணாமல்போனோரின் வலிகள்தொடர்பான வேதனையின் வரிகளை வெளிச்சமிட்டு விளக்கவிரும்புகின்றேன்.
 
காலமாற்றத்தில் எமது தேசத்திலும் ஆட்சியில் மாற்றம், அரியணையில் மாற்றம் என்ற வகையில் பல மாற்றங்கள்நிகழ்ந்துமுடிந்தன. இன்னும் பல மாற்றங்கள் நிகழவும்இருக்கின்றன. ஆனால், எமது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களதுஉள்ளங்களின் அழுகை இன்றுவரை மாறவேயில்லை. நித்தம்அக்கினியில் குளிக்கும் அவலக்குரல்கள்தான்ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. அதன் மூலகாரணமாககாணாமற்போனவர்கள் சம்பந்தமான நிலைப்பாடு என்னவென்ற வினாவே எழுகிறது. கடந்த 30 வருட காலயுத்தத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த ஒவ்வோர்ஆட்சியாளரின் காலத்திலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள், பெரியோர்கள் கடத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வெள்ளை வான்மூலமும் விசாரணைக்கு அழைத்தும்சுற்றிவளைப்புக்களின்போதும் தமிழ் ஒட்டுக்குழுக்களின்மூலமும் இவர்கள் கடத்தப்பட்டுக்காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன? இன்று வடக்கு, கிழக்கில் பிள்ளைகளைத் தேடுகின்றபெற்றோர்களும் பெற்றோர்களைத் தேடுகின்ற பிள்ளைகளும்கணவன்மாரைத் தேடுகின்ற மனைவிமாரும் மனைவிமாரைத்தேடுகின்ற கணவன்மாரும் சகோதரர்களைத் தேடுகின்றசகோதரர்களும் உறவுகளைத் தேடுகின்ற உறவுகளும்கண்ணீருடன் அலைமோதித் தவிக்கின்றார்கள். தமதுபிள்ளைகள், தமது பெற்றோர்கள், தமது கணவன்மார், மனைவிமார், தமது சகோதரர்கள் இந்த நாட்டில் ஏதோ ஓர்இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள்நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் வழிமேல்விழிவைத்துக் காத்துக்கிடக்கின்றார்கள்.
 
மாற்றமடையும் புதிய புதிய அரசுகளும் புதிய புதியஆணைக்குழுக்களை நியமித்து, “உங்களுக்கு உங்களின்பிள்ளைகளின் நிலையினைக் கூறுவோம்” என்று கூறின. ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணைகளை நடத்தின. ஆனால், இன்றுவரை எந்த ஆணைக்குழுமூலம் முடிவுகிடைக்கப்பெற்றுள்ளது? அமைக்கப்படும்ஆணைக்குழுக்களும் ஆட்சியாளர்களின் அனுசரணையில்அணைந்த குழுக்களாகவேசெயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. நீதி மலரும் என்ற நம்பிக்கையில்தான் எமது மக்கள் இந்த ஆணைக்குழுக்களின்முன்னிலையில் தமது உறவுகளின் நிலையினைஎடுத்துரைத்தார்கள்; இன்றுவரை எடுத்துரைத்தும்வருகின்றனர். ஆனால், விடிவும் இல்லை! ஒரு முடிவும்இல்லை! காணாமற்போன உறவுகளுக்கு “விசாரணை” என்றநாமமே இறுதியான விடையாக அமைகின்றது. காணாமல்போனோர் என்ன ஆனார்கள்? என்பதைச்சர்வதேசமும் இன்று வினவி வருகின்றது. சர்வதேசசமூகத்திடம் எமது மக்கள் இதனைத்தான் இன்றும்கோரிவருகின்றனர்.
 
யுத்தத்தின் இறுதியில் 2009.05.19ஆம் திகதியன்றுமுள்ளிவாய்க்காலில் ஏராளமானோர் இராணுவத்தினரிடம்சரணடைந்தார்கள். ஏராளமானோரை இராணுவம்கைதுசெய்து அழைத்துச் சென்றது. இதுபல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றஒரு சம்பவம். அக்காலகட்டத்தில் யுத்தத்தினை வழிநடத்தியதளபதிகளும் அரச தலைவர்களும் இந்த அவையிலும்வெளியிலும் உள்ளனர். அவர்களுக்குத் தெரியும், இவர்கள்எங்கே உள்ளார்கள்? இவர்களுக்கு என்ன நடந்தது? என்று. அதேவேளை காணாமற்போனோரின் நிலை என்ன என்றும்பலருக்குத் தெரியும். அவர்கள் இப்போது மெளனித்திருக்க, அதன் முடிவினை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? காணாமல்போனோரைக் கண்டறியும் மக்ஸ்வெல் பரணகமதலைமையிலான ஆணைக்குழு 1983ஆம் ஆண்டு முதல் இறுதியுத்தம் நடைபெற்ற காலப்பகுதிவரை இடம்பெற்றசம்பவங்களுக்கான அதன் விசாரணைகளை இன்றுமேற்கொண்டு வருகின்றது. இவ்வாணைக்குழுவில் சிலர்அளித்த வாக்குமூலங்களை இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன்.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பரணகம ஆணைக்குழுவின்விசாரணையின்போது, ஒரு தாயார் “2013.03.15 அன்று ‘சனல்4’ வெளியிட்ட புகைப்படங்களில் புஸ்பராசா அஜந்தன் என்ற19 வயதுடைய தனது மகன் நிர்வாணமான நிலையிலும் அரைநிர்வாண நிலையிலும் உள்ளார்” என்று உறுதிப்படுத்தியுள்ளார். மற்றுமொரு தாயாரான சிவலிங்கம் அனுசியா என்பவர், 2014ஆம் ஆண்டு தனது மகன் வெலிக்கடைச் சிறையிலிருந்துநீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தான்தன்னுடைய கண்ணால் பார்த்ததாகச் சாவகச்சேரிப் பிரதேசசெயலகத்தில் நடந்த விசாரணையின்போது கண்ணீர் மல்கக்கூறியுள்ளார். அதுமட்டுமன்றி யாழ்ப்பாணம் நீர்வேலிதெற்கைச் சேர்ந்த சின்னத்துரை கந்தையா என்பவர், “கடந்த18.08.2006 அன்று இரவு 12 மணியளவில் என்னுடையவீட்டிற்கு வந்த இராணுவமும் ஈ.பீ.டீ.பீ.யினரும் எனது மகன்ஜதுசனைப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்; அதன்பின்பு அவர்களிடம் சென்று கேட்டபோது, தாங்கள்பிடிக்கவில்லை என்று கூறினார்கள். இது விடயமாக மனிதஉரிமைகள் அமைப்பிலும் சென்று கூறி 10 வருட காலமாகியும்மகன் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
 
கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடந்த பரணகம ஆணைக்குழு விசாரணையில் புவனேந்திரன் சந்திரகாந்திஎன்ற தாயொருவர் வாக்குமூலம் அளிக்கையில், “இறுதிக்கட்டயுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்துஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோதுஓமந்தைப் பகுதியில் வைத்து என்னுடைய மகள் புவனேந்திரன் நிசாந்தினியை இராணுவப் பெண் படையினர் பிடித்துச்சென்றுபஸ்ஸில் ஏற்றினார்கள். அதுபோன்று, எனது மகன்புவனேந்திரன் மதன்ராஜ் என்பவரையும் படையினர் பஸ்ஸில்ஏற்றினார்கள். அந்த பஸ்ஸில் மேலும் ஏராளமானஇளைஞர்கள் இருந்ததைக் கண்டேன்” என்றுகுறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இறுதி யுத்த முடிவின்போது 1,46,679 பேர்என்ன ஆனார்கள்? என்பது தொடர்பில் இதுவரை எதுவும்தெரியவில்லை என்பதையும் நான் இவ்விடத்தில் குறிப்பிடவிரும்புகின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோரின்உறவினர்களிடம் பலமுறை விசாரணை செய்துவரும் இந்தஆணைக்குழு, மக்கள் வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் இன்றுவரை சம்பந்தப்பட்ட அரச தலைவர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ, சிப்பாய்களையோ அழைத்துவிசாரணை செய்யவில்லை. இந்த ஆணைக்குழுவானது எப்பொழுது அதனது அறிக்கையினை முழும செய்துசமர்ப்பிக்கும் என்பதை இந்தத் தேசிய அரசு பகிரங்கமாகக்குறிப்பிடவேண்டும். இவர்கள் காணாமலாக்கப்படஉடந்தையாக இருந்தவர்களுக்கும் அதற்கான அனுமதியைவழங்கியவர்களுக்கும் இந்தத் தேசிய அரசாங்கம் என்னசெய்யப்போகின்றது? இந்த நாட்டில் ஓர் இனத்தைச்சேர்ந்தவர்களைக் கடத்துவதும் மனித உயிர்களைப் பறிப்பதும்ஆளும் இனத்தின் ஜனநாயகக் கோட்பாடா?தமிழர்கள் வேள்விக்கு வளர்க்கப்படும் மந்தைகளா? அல்லது இந்தஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கூடிமக்களா? என்பதைக் காணாமல் ஆகக்கப்பட்டோரின் விசாரணைதொடர்பிலான நீதியின்மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
 
ஒவ்வொரு மனிதனும் தனது மொழி, கலாசார, பண்பாட்டுஅடையாளத்துடன் வாழத் துடிப்பது நியதியே! இது மனிதநேய, மாண்புகொண்ட நெறிமுறயும் ஆகும். அதன் அடிப்படையில்தான் உலக செம்மொழியாம் தமிழ்மொழியினை நாம் பேசுகின்றோம்; தமிழர்களாக வலம்வருகின்றோம்.
 
அதுபோன்று சிங்களச் சகோதரர்களும்பெளத்த கோட்பாட்டின் அடிப்படையில் சிங்களம் பேசுவதால்”சிங்களவர்கள்” என்ற நாமத்தைக் கொண்டுள்ளார்கள். மொழிகளால் மனிதர்கள் பழிகள் காணக்கூடாது. மனிதநேயத்துடன் மனிதர்களாக மனிதர் வாழவேண்டும். நாம்அதனை வேண்டித்தான் எமது அடையாளக் கலாசாரத்தினைநிலைநிறுத்திடவும் எமது அபிலாஷைகளுடன் வாழவும் இந்தநாட்டில் அஹிம்சை வழியில் போராடினோம். ஒப்பந்தங்கள்சமத்துவ அடையாளங்களுக்காக எழுதப்பட்டபோதும் அவைமேலாதிக்கச் சக்திகளின் மூலமாகக் கிழித்தெறியப்பட்டும்காணாமல் ஆகக்கப்பட்டும் போனபடியால் ஆயுதக் கலாசாரம்முனைப்புப் பெற்றது.
 
இந்த இரு படிமுறைகளுக்குள்ளும்பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்கொன்றொழிக்கப்பட்டார்கள்; கடத்தப்பட்டும்கைதுசெய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
 
இவ்வாறு கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்தும்விசாரணைக்கெனச் சென்று ஆயுத ஒட்டுக்குழுக்களால்கடத்தப்பட்டும் காணாமல்போனோரின் உண்மை நிலைதனைஇந்தத் தேசிய நல்லிணக்க அரசும் இந்த அரசவையும் ஓர்உறுதியான நிலைப்பாட்டுடன், உரைத்திட வேண்டும். குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானமக்களின் மின்னால் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், அவர்களை அழைத்துச் சென்ற அருட்தந்தைபிரான்சிஸ் அடிகளார் ஆகியோரும் தற்பொழுது எங்குஇரகசியமாக வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இந்தஅவையும் இந்த அரசும் எமது மக்களுக்கு வெளிக்கொணரவேண்டும். இது சம்பந்தமாகப் பரணகம ஆணைக்குழுவுக்குமுன்னிலையில் ஏராளமான முறைப்பாடுகள் சாட்சிகளுடன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதனையும் இவ்விடத்தில்கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
 
இந்த அவையிலுள்ள ஒவ்வொரு கெளரவ உறுப்பினரும்மனிதநேய மாண்புடன் மனச்சாட்சி, மனிதம் கொண்டு பேசிடவேண்டும். உண்மையான நீதியும் சமத்துவம் கொண்டஆட்சியும் இந்த ஜனநாயக நாட்டில் உள்ள தென்பதைப்பறை சாற்ற இது நல்லதொரு சந்தர்ப்பமாகும். நாங்கள் எமதுதமிழர்களின் குருதியால் போடப்பட்ட புள்ளடி நிமித்தமே இந்தஅவையில் அமர்ந்துள்ளோம். அவர்களுடைய ஆத்ம உணர்வுகளே எம்மைப் பேச வைக்கின்றன. இங்கு எம்மால்சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இனவாத நோக்கம்கொண்டதல்ல; நாம் கூறும் வார்த்தைகள் மனித விழுமியமாண்பு கொண்டவையே! நிழலற்ற நீதி கோருபவையே! அவைபத்திய நெறிகொண்ட சத்திய வார்த்தைகளே!
 
இறுதியாக, இந்த அவைக்கும் இந்தத் தேசிய நல்லிணக்கஅரசுக்கும் ஒரு விடயத்தை அன்பாகக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். “தமிழர்கள் மாளப் பிறந்தவர்கள் அல்ல; அவர்களும் சகோதர இனத்தவர் போன்று சுயநிர்ணயஉரிமைகொண்ட அடையாள விழுமியத்துடன் வாழப்பிறந்தவர்கள்” என்று தெரிவித்துக்கொள்வதோடு, எமதுமக்களின் கண்ணீரைத் துடைப்பதும் நீதியைநிலைநாட்டுவதுமான பொறுப்பு இந்த அரசிடமே தங்கியுள்ளதுஎன்று கூறி, விடைபெறுகின்றேன். நன்றி. இவ்வாறு பாராளமன்ற உரையில் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments