Latest News

February 19, 2016

இராணுவத்திடமுள்ள விபரங்கள் அவசியம்
by admin - 0

காணா­மல்­போனோர் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றியும் தேடு­தலில் இரா­ணு­வத்தின் ஆதா­ரங்­க­ளையும் சேர்த்­துக்­கொள்­வது சாத­க­மாக அமையும். இறுதி யுத்­தத்தில் சர­ண­டைந்தோர் தொடர்பில் இரா­ணுவம் வச­முள்ள
தக­வல்­க­ளையும் பெறு­வது விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு வலுச்­சேர்ப்­ப­தாக அமையும் என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­தி­ருந்­த­வர்கள் மற்றும் அவர்­க­ளுக்கு ஆயுத, பண உத­வி­களை வழங்­கி­ய­வர்கள் தேசத்­து­ரோ­கிகள் எனவும் அர­சாங்கம் குறிப்­பிட்­டது.

விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தி­ன­ருக்கு பண உத­வி­க­ளையும், ஆயுத உத­வி­க­ளையும் வழங்­கியோர் தொடர்பில் விரைவில் சரத் பொன்­சேகா தக­வல்­களை வெளி­யி­டுவார் என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் 58ஆவது படைத்­த­ளத்தின் சர­ண­டைந்­த­வர்கள் தொடர்பில் இரா­ணுவம் வசம் உள்ள ஆதா­ரங்­களை நீதி­மன்றில் முன்­வைக்­க­வேண்டும் என்று தீர்ப்பும் வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை வின­விய போதே அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், 
இறுதி யுத்­தத்தில் இரா­ணுவம் வசம் சர­ண­டைந்த பொது­மக்கள் தொடர்பில் உள்ள ஆவ­ணங்­களை பரி­சீ­லனை செய்­வது சிறந்த விட­ய­மாகும். உண்­மை­களை கண்­ட­றிய இது நல்­ல­தொரு ஆதா­ர­மாகும். குறிப்­பாக காணாமல் போன­தாகக் கூறப்­படும் பொது­மக்கள் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஆணைக்­கு­ழுவின் கால எல்­லையும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த காலப்­ப­கு­தியில் காணா­மல்­போ­ன­தாக கூறப்­படும் பொது­மக்கள் தொடர்பில் மேலும் ஆதா­ரங்­களை திரட்ட வாய்ப்­புகள் உள்­ளன. இரா­ணுவம் வச­முள்ள ஆதா­ரங்­களை முன்­வைப்­பதன் மூலம் இந்த செயற்­பாடு இன்னும் இல­கு­வாக்­கப்­படும்.
போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் நீதி­மன்ற சுயா­தீன செயற்­பா­டு­க­ளுக்­கென விசேட சட்­ட­மூலம் ஒன்­றையும் இந்த ஆண்டு நடுப்­ப­கு­திக்குள் கொண்­டு­வர தீர்­மா­னித்­துள்ளோம். ஆகவே போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் அர­சாங்கம் தெளி­வாக தமது நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்த நிலையில் எமக்கு கிடைக்கும் ஆதா­ரங்­களை பூர­ண­மாக முன்­வைப்­பதன் மூல­மாக உண்­மை­களை கண்­ட­றிய வாய்ப்­பாக அமையும்.

மேலும் யுத்த கால­கட்­டத்தில் நடை­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அர­சாங்கம் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்­றது. சர்­வ­தேச ஒத்­து­ழைப்பும் இந்த விட­யத்தில் கிடைத்து வரு­கின்­றது. எனவே இந்த விட­யத்தில் காலம் கடத்­தப்­ப­டாது வெகு விரைவில் பொது­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் ஏனைய பிர­தான சிக்­கல்­க­ளுக்கும் தீர்வை பெற்­றுத்­தர முடியும்.

அதேபோல் விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி வழங்­கி­ய­தா­கவும், அவர்­க­ளுக்கு ஆயுத உத­வி­களை வழங்­கி­ய­தா­கவும் எழுந்­துள்ள சில குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எவ்வாறு இருப்பினும் புலிகளுக்கு உதவி செய்துகொண்டு அரசாங்கத்தில் எவரும் செயற்பட்டிருந்தால் அது தேசத்துரோக செயற்பாடாகும். அவ்வாறான தேசத்துரோக செயற்பாடுகள் கண்டறியப்படும் நிலையில் அவர்கள் மீதான கடுமையான நடவைக்கை எடுக்கப்படும் என்றார்.
« PREV
NEXT »

No comments