Latest News

February 01, 2016

இலங்கைக் கல்வி அமைச்சரின் சம்பளத்தைக் குறைத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?
by admin - 0

தமிழர்களை ஆசிரிய உதவியாளர்கள் என்று பாடசாலைகளில் நியமித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டும் கல்வி அமைச்சரின் சம்பளப் பணத்தைக் குறைத்து வழங்கப்பட்டால் அவரது மன நிலை எப்படி இருக்கும் என பாதிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழர்கள் வாழும் பகுதிப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காகவும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பாக ஆசிரியர் நியமனம் வழங்குவதாகவும் கூறி தமிழர்களுக்கு ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனத்தை இலங்கையின் கல்வி அமைச்சு வழங்கி அவர்களுக்கான மாதச் சம்பளமாக 6000 ரூபாவை மாத்திரமே வழங்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகின்றது. இதே வேளை சிங்களவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்கி 35000 ரூபாவுக்கும் மேற்பட்ட சம்பளத்தை இலங்கைக் கல்வி அமைச்சு வழங்கிவருகின்றது. இதற்குத் தமிழர்களாகவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்து வருவதாகப் பாதிக்கப்பட்டவர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலட்சக் கணக்கில் சம்பளம் பெற்று வசதி வாய்ப்புக்களுடன் வாழும் கல்வி அமைச்சர் உட்பட்ட இலங்கையின் அமைச்சர்கள் தமிழர்களை வெறும் ஆறாயிரம் ரூபா சம்பளத்திற்கு அரச ஊழியர்களாக நியமித்து ஈவிரக்கமற்ற வகையில் அவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகின்றார்கள்.

மாதாந்தம் 6000 ரூபா சம்பளத்திற்காக முழுநேரப் பணியாற்றும் தமிழர்களின் உழைப்புச் சுரண்டப்பட்ட நிலையில் அவர்களது குடும்பங்கள் பெருங் கஸ்டங்களில் வாடுவதும் இதனைச் சுட்டிக் காட்டி தமக்கான சம்பளப் பணத்தை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்ற கோரி வருகின்ற போதிலும் பதவியிலுள்ள தமிழ் அமைச்சர்கள்கூட தமது நிலையைப் புரிந்துகொள்ளாது தமது உழைப்பைச் சுரண்டுவதற்குத் துணையாக இருந்து ஆதரவளித்து வருவதாகப் பாதிக்கப்பட்டவர்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது
« PREV
NEXT »

No comments