காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை கைமாற்றப்பட்ட 68 சுதந்திர தினம் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கையில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கைக்கு வழங்கப்பட்ட போலிச் சுதந்திரம் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கும் பேரினவாதிகளின் ஒடுக்குமுறைக்கு வழிவகுத்தது இச் சுதந்திரம் ஈழத் தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்துவந்து கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்க வழிவகுத்தது. இன்றும் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்வதற்கான ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பகுதி மலையக மக்களை நாடற்றவர்களாக்கி மற்றொரு பகுதியினரை நிரந்தர அடிமைகளாகியுள்ளது. இஸ்லாமியத் தமிழர்களை பேரினவாத்த்தின் கோரப்பிடிக்குள் இருத்திவைத்துள்ளது. இனப்படுகொலை நிகழ்த்திய கொலைஞர்களை இலங்கையின் சிம்மாசனத்தில் ஏற்றிவைத்துள்ளது. ஏழைச் சிங்கள மக்களை மீள முடியாத வறுமையின் பிடியில் கட்டிவைத்துள்ளது. இந்த சுதந்திரம் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் இருண்ட நாள். இரத்தம் படிந்த இனக்கொலை வரலாறுகளை மீண்டும் நினைவூட்டும் துயர் சூழ்ந்த நாள்.
இந்த நாள் கொண்டாடப்பட வேண்டியதல்ல! போர்குணத்தோடு துண்டாடப்பட வேண்டிய நாள்!!
இலங்கையின் சுதந்திர நாளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் இலங்கைத் தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்களையும் அவர்களின் நட்பு சக்திகளையும் போராட அழைக்கிறோம்!
காலம்: 04.02.2016 மாலை 3 மணி முதல் 5 மணி வரை.
இடம்: High Commission for Sri Lanka
13 Hyde Park Gardens, London W2 2LU
Lancaster Gate Tube Station
இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கபோவதாகக் கூறிக்கொள்கிறார்கள். பேரினவாத ஒற்றையாட்சியின் அரசியல் யாப்பு எமது சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்காது. பேரினவாதத் தீர்வுத் திட்டம் எமது சுதந்திரத்தை உறுதி செய்யாது. சுதந்திர தினம் என்ற இருண்ட நாளில் எமது மக்களின் குரலாக நாங்கள் ஒலிப்போம்.
1. இலங்கை அரசே சிறுபான்மைத் தேசிய இனங்களை வாழவிடு!
2. தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரி!
3. இனப்படுகொலை சூத்திரதாரிகளைக் கைது செய்!
4. இனக்கொலை இராணுவத்தை எமது மண்ணிலிருந்து வெளியேற்று!
5. பறித்தெடுக்கப்பட்ட மக்களின் நிலங்களை மீள வழங்கு!
6. சுதந்திரம் பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு மட்டுமே!
7. இலவசக் கல்வியை அழிக்காதே!
8. ஏகாதிபத்திய ஏவல் அரசே, இலங்கை மக்களையும் வளங்களையும் அழிக்கத் துணை போகாதே!
9. மலையகத் தமிழர்கள் சுதந்திரத்தின் அடிமைகள் அல்ல!
10. அரசியல் கைதிகளை அரச பயங்கரவாதச் சிறைகளிலிருந்து விடுதலை செய்!
No comments
Post a Comment