Latest News

February 17, 2016

மாவட்ட அபிவிருத்தி குழு எதற்காக? அரசு தெளிவுபடுத்த வேண்டும்
by admin - 0

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் மாவட்ட அபிவிருத்தி குழு எதற்காக? என்பதை இந்த அரசு தெளிவுபடுத்தவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பிர் இ.சாள்ஸ் நிமலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு அபிவிருத்திக்  குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைவாக புதிதாக முல்லைத்தீவு வரும் தென்பகுதி மீனவர்களின் வருகையை தடுக்குமாறு மத்திய கடற்றொழில் ஆணையாளரிடம் நேரடியாக தொலைபேசியில் உரையாடியபோது மத்திய கடற்றொழில் ஆணையாளர் தெரிவித்த பதிலால் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், தென்பகுதி மீனவர்களின் அத்து மீறிய வருகை வட மாகாணத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக சகல மாவட்டங்களிலும் மீனவர்கள் தமது எதிர்ப்பினையும் அதனை தடுக்கும் படியாகவும் பல கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்பகுதி மீனவர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்க கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி மீனவர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் , திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட ஜந்து பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் ஏற்கனவே கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் 72 தென்பகுதி மீனவர்கள் தவிர புதிதாக எவரையும் அனுமதிப்பதில்லை என குறித்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் மீனவர்கள் எங்கும் மீன் பிடிக்கலாம், அதாவது கடற்பரப்பினுள் எங்கும் மீன்பிடிக்கலாம் என்பதே அதன் பொருள், ஆனால் அவர்கள் கரையில் வந்திருந்து பிடிக்கமுடியாது.

எனினும் இதனை மத்திய கடற்றொழில் ஆணையாளர் மறுக்கின்ற நிலை கவலையளிக்கின்றது. அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு மாறாக இவரது பதில் அமைந்துள்ளது.

இவ்வாறு அபிவிருத்தி குழுவினால் எடுக்கப்பட்ட முடிவினை மத்திய கடற்றொழில் ஆணையாளர் மறுத்துள்ளதுடன் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை அமைச்சு நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சே அதனை தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.

அவரது பதில் அதிர்ச்சியாக உள்ளது ஆனால் தென்பகுதி மீனவர்கள் தற்பொழுது வந்த வண்ணமுள்ளனர். எனவே இதனை தடுக்க முடியாமை கவலையளிக்கின்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றால் இந்த மாவட்ட அபிவிருத்தி குழு எதற்காக? என்பதை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும்
« PREV
NEXT »

No comments