Latest News

January 09, 2016

தை பூசத்துக்கு அரசு விடுமுறை கோரி போராட்டம்- நாம் தமிழர் ஆட்சியில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு:சீமான்
by admin - 0

மதுரை: உலகம் முழுவதும் 13 கோடி தமிழர்கள் கொண்டாடும் தை பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை விடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் தை பூசத்தை ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். உலகிலுள்ள 13 கோடி தமிழர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

தமிழகத்தில் பிற மொழி தினங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழர்களின் முக்கிய திருவிழாவான ஜனவரி 25-ந்தேதி கொண்டாடப்படும் தைப் பூச நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.


நாம் தமிழர் ஆட்சியில்.. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். ஊழலை உலகத்துக்கே கொண்டு சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் தான் தற்போது அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.


நிலம் சார் தொழில்களுக்கு முன்னுரிமை நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் விவசாயம், கால்நடை வளர்ப்பு, பயிர் உற்பத்தி என நிலம் சார்ந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



« PREV
NEXT »

No comments