Latest News

January 02, 2016

மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
by admin - 0

தமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.

அவுட்லுக், வன்ட்றைவ், மற்றும் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சேவைகள் இலக்கு வைக்கப்பட்டால், பாவனையாளர்களுக்கு அது குறித்து அவை அறிவுறுத்தும்.

இவ்வாறான எச்சரிக்கை ஒன்று எவருக்காவது கிடைக்கப்பெற்றால், தமது தரவுகளை பாதுகாப்பது தொடர்பில், மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நகர்வானது, கண்காணிப்பு தொடர்பில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டங்களை கட்டுப்படுத்துவதாக அமையும்.

டுவிட்டர், ஃபேஸ்புக், கூகுள், யாகூ உட்பட ஏனைய பல நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் தரவுகளை அரசாங்கம் கோருவது குறித்து, வாடிக்கையாளர்களை எச்சரிப்பது என முன்பு உறுதியளித்திருந்தன.
« PREV
NEXT »

No comments