Latest News

December 02, 2015

ராஜீவ் கொலை குற்றவாளிகளை? விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by admin - 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதில் மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்குப் பின்னணி:

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடந்து வந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.

மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை" என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளன.

ராஜீவ் கொலை வழக்கில் இவர்கள் வேண்டுமென்றே சம்பந்தப்படுத்தப்பட்டார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது 
« PREV
NEXT »

No comments