Latest News

December 13, 2015

சுவிஸ் தமிழர்களை நோக்கி வரும் பேராபத்து
by admin - 0



எதிர்வரும் 28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா? இல்லையா? என்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதற்கான முன்மொழிவு வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் பிற்போக்கு வலதுசாரி கட்சியான SVP கட்சி முன்னெடுத்தது.

இவ்விடயம் சட்ட ரீதியாக அமுலாக்கப்பட்டால் வெளிநாட்டவர்கள் என்ற ரீதியில் நாம் எதிகொள்ள நேரிடும் பிரச்சனைகள்.

1. சிறிய குற்றம் செய்தாலும் நாம் இனவாதரீதியாக குற்றம் சாட்டப்பட்டு நாடுகடத்தப்படலாம். 

2. எமது குடும்பங்களில் சிலர் சுவிஸ் பிரயையாகவும், சிலர் வதிவிட அனுமதி உள்ளவர்களாகவும் வாழ்கிறோம். இச் சட்டம் அமுலாக்கப்பட்டால் உதாரணத்திற்கு வதிவிட அனுமதியுடன் வாழும் கணவன் குற்றம் சாட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் சுவிஸ் பிரஜா உரிமையுடன் வாழும் மனைவியும் இந்த நாட்டை விட்டு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்.

3. நீதிமன்ற வழக்காடல்களின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும் அதிகாரத்தை இச்சட்டம் அமுலாக்கவுள்ளது.

4. பெற்றோர்கள் வதிவிட அனுமதியுடனும், பிள்ளைகள் சுவிஸ் பிரயாஉரிமையடனும் இருப்பின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டால் ஏதும் அறியாத குழந்தைகளும் சேர்த்து நாடுகடத்தப்படும் மனித அவலம் நடைபெறும். காரணம் சுவிஸ் சட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்டு பிள்ளைகள் பெற்றோருடனேயே இகுக்கவேண்டும் என்பது நியதி.

5. இச்சட்டம் சுவிஸ்நாட்டின் அரசியலமைப்பை மீறுகிறது.

6. இச்சட்டம் ஐரோப்பிய மனித உரிமை உடன்படிக்கையை காலால் மிதிக்கிறது.

7. சர்வதேச குழந்தைகள், சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கிறது.

8.ஐ.நா மனிகஉரிமைகள் சாசனத்தை மீறுகிறது.

இனத்துவேசத்தின் எண்ணக்கருவில் முளைத்த இச்சட்ட அமுலாக்களை எதிர்த்து வெளிநாட்டவர்களின் அனைத்து அமைப்புக்களுடனும் இணைந்து வெளிநாட்டவர்களை ஆதரிக்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி மாபெரும் வேலைத்திட்டம் ஒன்றை தேசிய ரீதியாக முன்னெடுக்கவுள்ளது.

இதற்கான தார்மீக ஆதரவை தமிழர்களின் பிரதிநிகளாக எம்மிடம் உதவிகோரப்பட்டுள்ளது. 

இச்சந்திப்பிற்பு சுவிஸ் வாழ் தமிழீழ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி உங்கள் சுவிஸ் ஈழத்தமிழரவை கலந்துகொண்டது.

எமது இருப்பை கேள்விக்குள்ளாக்கவிருக்கும் இச் சட்ட அமுலாக்கலை எதிர்த்து தமிழ்மக்களின் இரும்புக் குரலாக நாம் செயற்படுவோம்.

அத்துடன் அனைத்து தமிழ் சமூகத் தலைவர்களையும் இவ்வேலைத்திட்டத்தின் பால் ஒன்றுபடுத்திச் செயற்படுவதற்கான செயற்குழுவை நாம் வெகுவிரைவாக அறிவிக்கவுள்ளதுடன் அனைவரது ஆதரவையும் வேண்டிநிற்கிறோம்.

உங்கள் பொன்னான ஒவ்வொரு வாக்குகளும் இச் சட்ட அமுலாக்கத்தை எதிர்த்தது Nein என்று வாக்களிக்கட்டும். SVP கட்சிசை தவிர அனைத்து வலது, இடது சாரிக் கட்சிகள் உட்பட அனைத்துச் சுவிஸ் வாழ் சமூகமும் ஒன்று திரண்டு நிற்கும் இச்சமயத்தில் நாமும் அணிதிரள்வோம்.

இவ்வாறு சுவிஸ் ஈழத்தமிழர் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments