Latest News

December 19, 2015

சுன்னாகம் பகுதியில் அதிகளவு தீங்குபயக்கும் பார உலோகங்கள் கண்டுபிடிப்பு
by admin - 0

சுன்னாகம் பகுதியில் அதிகளவு தீங்குபயக்கும் பார உலோகங்கள் கண்டுபிடிப்பு

சுன்னாகம் பகுதியில் சர்ச்சைக்குரிய அனல் மின்னிலையத்திற்கு அண்மையாக எண்ணெய் பரவியிருக்கலாம் என்று சந்தேகப்படும் இடங்களில் மண்மாதிரிகள் மீது நடாத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் அதிர்ச்சிதரும் வகையில் அமைந்திருக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழத்தின் பொறியியல் பீடத்தைச் சார்ந்த 4 ஆராய்ச்சியாளர்களால் இவ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையானது இந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட சுன்னாகம் பகுதியின் மண்மாதிரிகளில் அதிகளவிலான ஈயம் மற்றும் நிக்கல் எனப்படும் உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண சபையினரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் எண்ணெய் மாசு எதுவும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இவ்வாராய்ச்சி முடிவானது மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments