Latest News

December 08, 2015

கிளிநொச்சியில் மீண்டும் மழை 6 வருடகாலமாக தற்காலிக கொட்டகைகளில் வசிக்கும் மக்கள் அவலத்தில் அந்தரிப்பு! அதிகாரிகள் அசமந்தம்.....
by admin - 0

கிளிநொச்சியில் மீண்டும் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் தேங்கிக்காணப்பட்டு வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் மக்கள் அந்தரிக்கின்றார்கள்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதும் கடந்த ஆறு வருட காலமாக ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாகக் குடியிருக்கவென வழங்கப்பட்ட தற்காலிக தறப்பாள், தகரக்கொட்டகைகளில் வசிக்கும் மக்களே வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகின்றது. 


வெள்ள நீர் கிராமங்களுக்குள்ளால் சத்தத்துடன் பாய்ந்து செல்கின்றது. பலகிராமங்களில் வடிகாலமைப்புக்களை உரிய முறையில் மேற்கொள்ளப்படாதமையாலும் வடிகாலமைப்புக்களை அமைக்காது விட்டமையாலும் கிராமங்களுக்குள்ளால் பாயும் வெள்ளம் பாயமுடியாது தடைப்பட்டு வீடுகளுக்குள் புகுந்து காணப்படுகின்றது பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் மக்கள் போக்கு வரத்துச் செய்ய முடியாத இக்கட்டான நிலையை எதிர்நோக்கி அந்திக்கின்றார்கள். 

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம், கனாகம்பிகைக்குளம் அக்கராயன்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன. கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தின் அணைக்கட்டு உரியவர்களால் உரிய கவனம் செலுத்தப்படாதமையாலும் அணைக்கட்டுப் புனரமைப்பு வேலைகள் நீன்டகாலமாக மேற்கொள்ளப்படாதமையாலும் கனகாம்பிகைக் குளத்தின் அணைக்கட்டில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அணைக்கட்டு உடைக்கும் நிலையில் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம், பொன்நகர், இரத்தினபுரம், பன்னங்கண்டி, பரந்தன், சிவபுரம், உருத்திரபுரம், உமையாள்புரம், கண்டாவளை, புலியம்பொக்கணை, எள்ளுக்காடு, மருதநகர், யானைவிழுந்தான், பெரியபரந்தன், போன்ற கிராமங்களில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்காது அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதும் தற்காலிக கொட்டகைகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்கபட்டு அவலப்பட்டு அந்தரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இப்படியான கிராமங்கள் பலவற்றுக்கு அரசினது நிரந்தர வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அரசினது கிராமிய அபிவிருத்தித்திட்டங்கள் எதுவுமே கடந்தகாலம் முதல் தற்போது வரை அரசினால் எதுவும் வழங்கப்படாது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நிலையில் இப்படியான அரசினது அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் சிலவற்றில் தற்போதுதான் வடிகாலமைப்புக்கள் ஏற்படுத்துவதற்கான வேலைகள் மழை பெய்யப்பெய்ய இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 
« PREV
NEXT »

No comments