Latest News

December 08, 2015

முகநூலில் "இனவெறி" பற்றி பதிவு செய்த இந்திக்காரருக்கு பதிலடி கொடுத்த தமிழச்சி.
by அகலினியன் - 0

முகநூலில் "இனவெறி" பற்றி பதிவு செய்த இந்திக்காரருக்கு பதிலடி கொடுத்த தமிழச்சி.

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து பொறுப்பே இல்லாமல், இனவெறியுடன் பதிவு போட்டவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுஷா நடராஜன் என்ற தமிழ்ப்பெண். 

வெள்ளத்தில் சிக்கித் தவித்த சென்னைக்கு பல முனைகளிலிருந்தும் உதவிகள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன. எங்கிருந்தெல்லாமோ வந்து குவியும் இந்த அன்பு வெள்ளத்தில் சிக்கி் தவித்து வருகிறார்கள் இப்போது சென்னை மக்கள். இந்த நிலையில் இனவெறியுடன் முகநூலில் ஆசிஷ் செளத்ரி என்பவர் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் தமிழர்கள் செத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியிருந்தார்.

அதற்கு அனுஷா நடராஜன் என்ற தமிழச்சி அட்டகாசமாக பதிலளித்துள்ளார். இந்தியாவின் அத்தனை மூலையிலிருந்தும் சென்னைக்கு உதவிகள் குவிந்த நிலையில் இந்த "இந்தியர்" மட்டும் விபரீதமாக பதிவு போட்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

தமிழர்கள் செத்தால் எனக்கென்ன...

அந்தப் பதிவில் ஆசிஷ் செளத்ரி கூறுகையில், தமிழர்கள் செத்தால் நான் கவலைப்பட மாட்டேன். அவர்கள் எப்போதுமே தங்களை இந்தியர்களாக கருதியதில்லை.

இந்தியை ஏற்றதில்லை மேலும், நமது தேசிய மொழியை அவர்கள் தேசிய மொழியாக ஏற்றதில்லை. மேலும் தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டுமே அதிகம் பேசுகின்றனர்

இப்போது மட்டும் உதவி கேட்கிறார்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் பேசிக் கொண்டு, இந்தியை நிராகரித்த அவர்கள் இப்போது மட்டும் இந்தி பேசும் மாநிலத்தவரின் உதவியை எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்று கூறியிருந்தார் ஆசிஷ்.

சமூக வலைதளத்தில் கொந்தளிப்பு ஆசிஷின் இந்த இனவெறி பதிவிற்கு சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு கிளம்பியது. பலரும் ஆசிஷை கடுமையாக கண்டித்து பதில் அளித்து வருகின்றனர்.

தமிழச்சி அனுஷாவின் பதிலடி

அதேசமயம், அனுஷா நடராஜன் என்ற தமிழச்சி பதிலடி தெரிவித்துள்ளார் இந்த ஆசிஷுக்கு. அவரது பதில் இப்போது வைரலாகி பரவி வருகிறது.

நச்சுன்னு ஐந்து பதில்

இந்த பதில் பதிவில் அவர் ஐந்து பதில்களை ஆசிஷுக்கு அளித்துள்ளார். அதில் இந்தி முதலில் தேசிய மொழியே கிடையாது. ஆனால் தமிழ் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று என்று கூறியுள்ளார். மேலும், உன்னைப் பார்த்தால் மும்பை போல தெரிகிறது. பிறகு எப்படி நீ உன்னை வட இந்தியர் என்று கூறிக் கொள்ளலாம் என்று கேட்டுள்ளார்.

நாங்கதான் ஒரிஜினல் அடுத்து தென்னிந்தியர்களான திராவிடர்கள்தான் உண்மையான இந்தியர்கள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் பெர்சியாவிலிருந்து வந்தவர்கள் (மற்றவர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். உங்களை எப்போதுமே நாங்கள் வெறுத்ததில்லை.. ஆனால் ஆசிஷ் போன்றவர்களுக்கு அதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது)

மூளையே கிடையாது 

நாங்கள் ஆங்கிலம் படித்ததால்தான் உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை செயலதிகாரியாக உள்ளோம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் எம்டிவியில் வெட்டித்தனமாக எதையோ செய்து கொண்டுள்ளீர்கள். கடைசியாக, உங்களுக்கு முதலில் மூளையே கிடையாது. எங்களுக்கு ஆங்கில மோகம் அதிகம் என்று கூறும் நீ முதலில் இந்த போஸ்ட்டை ஆங்கிலத்தில் போட்டிருக்கக் கூடாது.. ! என்று கேட்டு மூக்கை உடைத்துள்ளார்; நம் தமிழச்சியான அனுஷா.
« PREV
NEXT »

No comments