Latest News

December 30, 2015

கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்30/12/2015
by admin - 0

கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள் இன்றாகும் 30/12/2015

ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப,; 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.

இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது.

இந்த நிலைக் கிளாலிக் கரையில், நின்று அவதானித்த அறிவரசன் புரிந்து கொண்டான். எந்தக் கட்டளையும் இன்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். ”அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்” அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவனை உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண் பட்டு சரியாக நிமிந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண் பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன்.

சந்தர்ப்பதை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இந்நிலையில் கிளாலியில் வற்றிய பகுதியில் நின்ற தனது கரும்புலிப் படகை தன்னந்தனியாகத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று, ” நான் இடிக்கட்டா ” எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு எந்தத் தொலைத் தொடர்பு கருவியும் இன்றி கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் மூன்று நீருந்து விசைப்படகுகள் – நான்கு கூவக் கிறாப் என்பன அந்த இடத்தில் இருக்கவே இல்லை.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக
தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 
இந்த வீரவேங்கைகளுக்கு
எனது  வீரவணக்கங்கள் !!!

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ
அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

வீரத்தமிழர் முன்னணி london

« PREV
NEXT »

No comments