Latest News

November 26, 2015

உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் வாரம் : வணக்க நிகழ்வுகள், இரத்தக்கொடுகை, நீதிக்கான மரநடுகை ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
by Unknown - 0

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியல் பெருவிருப்பினை வென்றெடுப்பதற்காக உயீர்நீத்த மாவீரச் செல்வங்களை நினைவேந்தும் வாரம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உணர்வெழுச்சியுடன் தொடங்கப்பட்டது.

இரத்ததானம், வணக்க நிகழ்வுகள், நீதிக்கான மரநடுகை என பல்வேறு செயல்முனைப்புகளை இவ்வார காலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது தமிழீழ தாயகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுக்கு அமைய, நவ 25ம் நாளன்று சிறப்புடன் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை , மாவீரர் வாரத்தினை முறையாக தொடங்கி வைத்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் கூடிய அரசவையில் மாவீவர் நினைவு வணக்க உரைகள், கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் மற்றும் ரொறண்ரோ பணிமனைகளிலும் மாவீரர் நினைவேந்தல் வாரம் உணர்வெழுச்சியுடன் தொடங்கப்பட்டுள்ளன.

மாவீரர்களை நினைவேந்தும் இவ்வாரத்தின் செயற்முனைப்பின் ஓர் அங்கமாக லண்டனில் இரத்தக்கொடுகை நவ 26ம் நாளன்று இடம்பெறுகின்றது.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் சிறப்புரையுடன் அமெரிக்காவின் நியு யோக்கில் நவ27 நாளன்று மாவீரர் வணக்க நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு0-51, 261 Street, Glen Oakas, NY 11004 இம்முகவரியில் எழுச்சியுடன் இடம்பெறவிருக்கின்றது.






« PREV
NEXT »

No comments