Latest News

November 27, 2015

தமிழ் கைதிகளின் நிலை தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் அவதானத்துடன்
by Unknown - 0

இலங்கையில் தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக பிரி்த்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, பிரித்தானிய வௌிவிவகார அமைச்சரினால் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழ் கைதிகளினால் முன்​னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் டிசம்பர் 15 ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் தாம் இலங்கை அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரித்தானிய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜெனிவாவில் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை தொடர்பில் தாம் திருப்தியடைவதாகவும் பிரித்தானிய வௌிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைத்து சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைய இது தொடர்பான சட்டமூலத்தை உருவாக்குமாறும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கபட்டுள்ளதாக பிரித்தானி வௌிவிவகார அமைச்சர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை செயற்படுவதற்கு பிரித்தானியா ஒத்துழைக்கும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments