Latest News

October 25, 2015

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது பாதிப்படைந்த இரு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியது, தமிழரின் ஆணையம்.
by அகலினியன் - 0

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது பாதிப்படைந்த இரு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியது, தமிழரின் ஆணையம்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதாரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள் இழந்தவர்கள் மற்றும் உதவிகளற்ற குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான தொழில் உதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக பேருதவி புரிந்து வருகின்ற உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் இந்த மாதத்திற்கான உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் வாழ்வாதாரப் பயனாளிகளாக முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே ஒரு பயனாளிக்கு வாழ்வாதார நிதியாக ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி வந்த உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது, இம்முறை அவசர தேவைகளாக சிறு, சிறு தொகை உதவிகளை எதிர்பார்த்து ஆணையத்திடம் வேண்டுகோள் வைத்த இரண்டு குடும்பங்களை ஆதாரபூர்வமாக தேர்வு செய்து உடனடி உதவிகளை கடந்த 15 மற்றும் 20 ஆம் திகதிகளில் வழங்கியுள்ளது.

முதலாவது பயனாளியாக இறுதி யுத்தத்தின் போது கணவரை இழந்து தனது சிறு வயது குழந்தைகளுடன் எந்தவித உதவிகளுமின்றி வாழ்ந்து வரும் உண்ணாப்புலவு, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. கங்கேஸ்வரன் மதிநிசா என்பவருக்கு, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கடை நடத்துவதற்கான பொருட்கள் வாங்க உதவியாக ஐம்பதாயிரம் (50,000) இலங்கை ரூபாய்களும்...
இரண்டாவது பயனாளியாக இறுதி யுத்தத்தின் போது படுகாயமுற்று தனது இடது கையையும் இடது காலையும் இழந்துள்ளதோடு வலது கையிலும் விழுப்புண்ணைப் பெற்று பல துயர்களோடு வாழ்ந்து வரும் கைதடி தெற்கு, நாவற்குழி, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. அந்தோணிராசா ராதிகா என்பவருக்கு, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோழி வளர்ப்பிற்காக இருபத்தைந்தாயிரம் (25,000) இலங்கை ரூபாய்களும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திருமதி. கங்கேஸ்வரன் மதிநிசா என்பவருக்கு உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் சார்பாக ஆணையத்தின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க வடமாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. துரைராசா ரவிகரன் அவர்கள் நேரடியாகச் சென்று உதவியை வழங்கியிருந்தார். மற்றும் செல்வி ராதிகாவிற்கான உதவியை ஆணையத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் வழங்கியிருந்தார்.


ஆணையத்தின் வாழ்வாதார நிதிகளைப் பெற்றுக் கொண்ட இரண்டு உறவுகளும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கும், உதவிகள் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் தங்களது நன்றிகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொண்டனர்.

உதவிகளை வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. துரைராசா ரவிகரன் அவர்களுக்கும், அனைத்து உதவி செயற்பாடுகளையும் பொறுப்பேற்று சீராக நடைமுறைப்படுத்திய இலங்கைக்கான ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளருக்கும் மற்றும் உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையங்கள் ஊடாக தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
« PREV
NEXT »

No comments