Latest News

October 31, 2015

சமூகவிரோதிகளின் திட்டமிடல் பிரிவாக மாறியுள்ளது தீவகப் பிரதேசம்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சில சமூகவிரோதக்குழுக்களின் தங்குமிடமாகவும் திட்டமிடும் பிரவாகவும் மாறியுள்ளது தீவகப்பிரதேசம். குறிப்பாக வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் போன் இடங்களில் ஆட்கள் அற்று காணப்பட்ட சில வீடுகளை அந்த வீட்டு சொந்தக்காராக உள்ள புலம்பெயர்ந்த தமிழர் அல்லது கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் சொற்ப வாடகைகள் கொடுத்து வாங்கி இவர்கள் அந்த வீடுகளில் இருந்து சமூகவிரோதச் செயல்களைச் செய்வதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

போதைப் பொருடகளை இந்தியாவில் இருந்து கடத்தி வந்து குறித்த பிரதேசங்களில் பதுக்கி வைத்திருப்பதாகவும் விபச்சார நடவடிக்கைகளுக்கு அந்த வீடுகளைப் பயன்படுத்தவதாகவும் தெரியவருகின்றது. வேலணை அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் வயதான தம்பதிகளை அதில் வாடகைக்கு அமர்த்தி அந்த வீட்டில் பல சமூகவிரோதச் செயல்களை ரவுடிகள் மேற்கொண்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரு பெண்களை வாகனத்தில் கொண்டு வந்த பலர் அப்பெண்களுடன் அங்கு விடிய விடிய கூத்தடித்ததாகவும் தெரியவருகின்றது. அத்துடன் அந்த வீட்டுக்கு இனந்தெரியாத நபர்களும் வந்துபோவதால் தமக்கு அச்சம் ஏற்பட்டு்ள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல் புங்குடுதீவிலும் சில சமூகவிரோதிகள் வீடுகளை வாடகைக்கு எடுத்து தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவகப் பகுதியில் வீடுகளை வாடகைக்கு கொடுக்கும் வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் வீடுகள் பெற்றுக் கொள்பவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூகநலன் விரும்பிகள் எமக்குத் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டில் வாடகைக் குடியிருப்பாளர்கள் பொலிசாரிடமும் கிராமசேகவரிடமும் பதிந்துவிட்டு இருந்தால் பல நடவடிக்கைகளைத் தடுக்க முடியும் எனவும் இது தொடர்பாக சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் கவனம் எடுக்க வேண்டும் எவும் அப்பகுதி சமூகநலன் விரும்பிகள் எமக்குத் தெரிவித்துள்ளனர்.


« PREV
NEXT »

No comments