Latest News

October 31, 2015

புலிகளின் 40 தொன் தங்கத்தினை விற்பனை செய்தார் மஹிந்த?
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் ஆகியோரின் உத்தரவுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் 40 தொன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் இருந்து வெளியாகும் பிரதான சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
இதன்போது வெளியிடப்படுள்ள குறித்த செய்தியில், யப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கே இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ தங்கம் 46 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர்களுக்கு ஒரு கிலோ தங்கத்திற்கு 2000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் வினைதிறன் அற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
யப்பானிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த தங்கம் குமரன் பத்மநாதன் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கமாக இருக்கலம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனை மூலம் கிடைக்கப் பெறும் பணத்தை 8 பேருடன் பங்கிட்டுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையை பிரபல சட்டத்தரணி ஒருவரே தயாரித்து வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவருக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments