Latest News

October 01, 2015

ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் : ஐ.நா ஆணையாளர்
by admin - 0

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நம்பத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அது கலைக்கப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பேரவையில் நேற்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பான தமது வாய்மூல அறிக்கை சமர்ப்பிப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணையை, ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு வடக்கு கிழக்கு பகுதிகளில் நடத்தியபோதும், ஆணைக்குழுவின் தீர்மானங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சமூகம் கேள்வியெழுப்பிவரும் நிலையில், ஆணைக்குழுவின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் எவ்வித பயனும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே தற்போதைய ஆணைக்குழு கலைக்கப்பட்டு, நம்பகத்தன்மை வாய்ந்ததும் சுயாதீனமானதுமான ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments