Latest News

October 18, 2015

தமிழினியின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது! [படங்கள் இணைப்பு]
by admin - 0

தாயகத்தில் இன்று புற்றுநோய் காரணமாக சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, தமது 43ஆவது வயதில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இயற்கையெய்தினார்.

நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார், மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

தற்போது பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில், பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழினி கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக சேர்ந்தார். பின்னர், தன்னுடைய சிறப்பான செயற்பாடுகளால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பை எடுத்து மகளிர் அரசியல் பிரிவை வழிநடத்தி வந்தார்.

இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்டதையடுத்து, தமிழினி அவருடைய தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டார்.

புனர்வாழ்வு நடவடிக்கையின்போது அவர் பல இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனையடுத்து தொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments