Latest News

October 17, 2015

கனேடிய பொதுத்தேர்தலில் தமிழர்களின் சமூக அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
by Unknown - 0

கனடாவில் வரும் ஒக்ரோபர் 19ம் நாளன்று இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் அதிகளவில் வாக்களித்து கனேடிய மண்ணில் தமிழர்களின் சமூக அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவோம் என நாடுகடந்த தமிழீழ அராசங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

இம்முறை ஆறு தமிழர்கள் பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளில் போட்டியிடுகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு இந்த அறைகூவலை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

புலம்பெயர் தேசங்களில் அதிகளவிலான ஈழத்தவர்கள் வாழ்கின்ற மண்ணாக கனேடிய தேசம் அமைவதோடு, பல்வேறு துறைகளில் குறிப்பிடதக்க வளர்ச்சியினை தமிழ்சமூகம் கண்டுள்ளது.

இதில் குறிப்பாக அரசியல் தளத்திலும் தமிழர்கள் பங்காற்;றத் தொடங்கியுள்ளனர், இதேவேளை
தமிழ்சமூகத்தின் மீதான அரசியற் கட்சிகளதும் அவதானிப்பும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் வரும் பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழர்கள் வாக்களிப்பதன் ஊடாக சனநாயகத்தின் மீதான நமது பற்றுதலையும்,பங்கெடுப்பினையும் வெளிப்படுத்துவதோடு, உலக அரங்கில் தமிழர்களின் மென்வலு தளுவிய போராட்டத்துக்கும் வளமூட்டுவதாகவும் அமையும்.

இதனை கருத்திற் கொண்டே, புலம்பெயர் தேசங்களில் இடம்பெறுகின்ற உள்நாட்டுத் தேர்தல்களில், அந்தந்த நாடுகளினால் வழங்கப்பட்டுள்ள வாக்குரிமைகளை பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று, நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏலவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுவே தமிழர்களின் சமூக அரசியற் இருப்புக்கு வலுவுள்ளதாக அமையும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments