Latest News

October 02, 2015

என்ன கொடுமை இது! இதை கேட்க ஆளே இல்லையா? செத்து மடியும் எம் உறவுகளை பூட்டி வைத்தே கொல்கிறார்களே
by admin - 0

என்ன கொடுமை இது! இதை கேட்க ஆளே இல்லையா? செத்து மடியும் எம் உறவுகளை பூட்டி வைத்தே கொல்கிறார்களே ... பூமியின் நரகம் தமிழகத்தின் சித்திரவதை முகாம். இதை மூட தமிழக தலைவர்கள் யாருமே வலியுறுத்த மாட்டார்களா? 

இடுப்புக்கு கீழ் இயக்கம் இல்லாத இந்த இளைஞர் இன்று காலை 5:30 அளவில் "உயிருடன் இருப்பதை விட சாவதே மேல்" என கூறி விட்டு  தனது மணிக்கட்டின் உயிர் நாடி நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் உள்ளார்.  இதில் கொடுமை என்ன என்றால் இந்த செய்தி கிடைக்கும் வரையில் அவரை காக்க அவசர சிகிச்சை பிரிவினர் கூட முகாமுக்கு செல்லவில்லை என்பதே. "தமிழ் அகதி தானே செத்து தொலையட்டும் என்ற இழிந்த பார்வையில் தமிழர்கள் இப்படி கொல்லப்படுகிறார்களே இது நீதியா?" 

 2012 ஆண்டு இவரை விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தில் தமிழக காவல் துறையினர் கைது செய்து சிறப்பு முகாமில் சிறை வைத்தனர். தானாக இயங்க முடியாத இவரை பராமரிக்க பராமரிப்பாளர்கள் கூட நியமிக்கப்படவில்லை. மனிதாபிமான ரீதியில் கூட இவரது நிலை கருத்தில் கொள்ளப்படவில்லை.

இவரை பரமாரிக்க ஆள் வேண்டும் என்பதனால் விடுவிக்க நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையிலும் இவர் விடுதலை செய்யப்படவில்லை.  

திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் ஆன  இந்த சித்திரவதை முகாமில் பராமரிப்பாளர் இன்றி முகாம் எனும் சிறை வாழ் அகதித் தமிழர்களே இவரை பராமரித்து வந்தார்கள். 

இன்றில் இருந்து அவர்கள் எல்லோருமே உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் அவர்கள் உதவியும் தனக்கு இந்நாட்களில் இல்லை என்ற மன அழுத்தத்தில் தான் இருப்பதை விட இறப்பதே மேல் என கூறி கொண்டு கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

முகாமில் இருக்கும் அனைத்து அகதிகளும் இப்பொழுது உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

எதை கேட்டார்கள் என்று எம் உறவுகளை இப்படி வதைக்கிறது இந்தியம்????? இன்று காந்தி ஜெயந்தியாம்.. மகாத்மா பிறந்த நாளாம் அகிம்சையை தோற்றுப் போக வைக்கும் அநீதிகளின் தேசமாக இருந்து கொண்டே புத்தன் பிறந்த பூமி என கொண்டாடுகின்றார்கள். அகிம்சைதோற்றுப் போன தேசம் இந்தியா. ஈழ மக்களை பொருத்தவரை துரோகத்திற்கு மேல் துரோகம் செய்யும் இந்தியாவின் அநீதிகளின் அடையாளங்களில் ஒன்று சிறப்பு முகாம். மூட சொல்லுங்கள்.. எங்கள் உறவுகளை விடுவிக்க சொல்லுங்கள்.

செந்தமிழினி பிரபாகரன்..





திருச்சி சிறப்பு முகாமில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, ஈழத்தமிழர்கள் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறி, ஈழத் தமிழர்கள் 15 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து,

அவர்களை விடுவிக்க வலியுறுத்திமகேஸ்வரன், தங்கவேல் உள்ளிட்ட 7 பேர் கடந்த மாதம் 4 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சிறப்பு முகாமில்இருந்து 2 பேர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து பெயரளவில் 2 பேரை மட்டும் அதிகாரிகள் விடுவித்துள்ளனர் என்றும், மற்றவர்களையும் உடனே விடுவிக்க வலியுறுத்தியும், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 11  ஈழத்தமிழர்கள், நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

இரண்டாவது நாளாக இன்றும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் நிலையில்    சுரேஷ்குமார் த/பெ ஞானசௌந்தரம் (வயது 37) என்பவர் ஈழத்திலிருந்து தனது மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில்ஏதிலியாக வாழ்ந்து வந்தார் இன்று அதிகாலை தனது அறையில் கையை அறுத்துக்கொண்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.


« PREV
NEXT »

No comments