Latest News

October 02, 2015

ஜெனீவா யோசனையால் இலங்கை அரசாங்கத்துக்கே அன்றி தமிழர்களுக்கு நன்மையில்லை!- தமிழக முதல்வர்
by Unknown - 0

ஜெனீவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான யோசனை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச விசாரணை தொடர்பில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய யோசனையை மத்திய அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமை வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா யோசனையின் மூலம் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை.

அது இலங்கை அரசாங்கத்துக்கே சாதகமாக அமைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் இலங்கையின் போர்க்குற்ற விசாரணையில் பங்கேற்பதன் மூலம் சர்வதேச தரத்துக்கு ஈடான ஒரு நீதித்துறை விசாரணையை எதிர்ப்பார்க்கமுடியாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மத்திய அரசாங்கம்ää இனப்பிரச்சினை தீர்வுக்காக சாதகமான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments