Latest News

October 09, 2015

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் வாழ்வுரிமை மகாநாடு தமிழினத்திற்கு பலம் சேர்கட்டும்-பா.உறுப்பினர் சி.சிறீதரன்
by admin - 0




எதிர்வரும் 10ம் நாள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தால் ஜேர்மன் மண்ணில் நடத்தப்படவிருக்கும் சிறப்பு ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாடு  சிறப்புற யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழத்துச்செய்தியொன்றை விடுத்துள்ளார் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை சிறப்பு மகாநாடு எதிர்வரும் 10ம் நாள் ஜேர்மனியில் நடைபெறுவதையிட்;டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.ஆழப்படர்ந்த ஈழத்தமிழினத்தின் இன்றைய நிலையில் இத்தகையதொரு மகாநாடு  புலம்பெயர் மக்களையும் தாயக மக்களையும் உள்ளத்தால் ஒன்றிணைத்து எமது இனத்தின் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான சிந்தனைகளை உருவாக்கும் என நினைக்கின்றேன்.உலகத்தமிழ் பண்பாட்டு கழகத்தின் அகிலத் தலைவராக மதிப்பிற்குரிய துரைராசா அவர்கள் பொறுப்பேற்ற பின் நடத்தப்படுகின்ற இந்த மகாநாடு சிறப்பு மிக்கதாக அமைய என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் எமது மக்களின் வாழ்வியலில் இனத்தின் எதிர்காலத்தில் எமது சந்ததிகளின் பயணத்தில் தன் சீரிய பார்வைகளை விரித்து அதற்கென பணிகளை திட்டங்களை உருவாக்கி அதை விரிவாக்கி தொடர்ந்து இயங்கும் ஒரு அமைப்பாக விளங்குவதை எமது மக்கள் அறிவார்கள்.இதன் செயலாளர் துரைகணேசலிங்கமும் இயக்கத்தின் தலைமை நிர்வாகமும் நாடுகளின் கிளை அமைப்புக்களும் உலக நிலைகளை ஆராய்ந்து நெகிழ்வுத்தன்மைகளுடன் எமது இனத்தின் இருப்பை காத்துக்கொள்ள பாடுவது போற்றத்தக்கது.உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் எமது மக்களை பொறுத்தமட்டில் விளம்பரங்களால் அல்ல போருக்குப்பின் எமது நிலத்தில் வீழ்ந்த எமது மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்பும் பணிகளாலேயே அறியப்பட்டிருக்கின்றது.இனம் மொழி பண்பாடு என்பவற்றின் காப்பரணாக இந்த இயக்கம் தொடர்ந்து பயணிப்பது நம்பிக்கை தருகின்றது.

இன்று எமது ஈழத்தமிழினத்தின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் ஊடாக உலகின் சகல நாடுகளுக்கும் ஐ.நா மன்றால் அறியப்பட்டிருக்கின்றது.எமது மக்களுக்கான நிரந்தரமான உரிமையுடன் கூடிய பூர்வீக மண்ணில் வாழும் நிலைக்கான ஆரம்ப புள்ளியொன்று சர்தேச நிலையில் இடப்பட்டிருக்கின்றது.இதை உரிமைக்காக போராடுகின்ற இனம் எப்படி தன்னுடைய ராஜதந்திரம் இனப்பற்று ஒற்றுமை அர்ப்பணிப்பால் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதைத்தான் காலம் பார்த்து காத்துக்கிடக்கின்றது.இந்த நிலையில் வாழ்வுரிமை மகா நாடுகள் அதன் நோக்கங்களும்  அதன் பிரகடனங்களும் எமது இனத்திற்கு பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

சர்வதேச அரங்குகளில் நடத்தப்படுகின்ற எமது இனத்தின் செயற்பாடுகள் இந்த உலகத்தால் நிச்சயம் உன்னிப்பாக கவனிக்கப்படும்.அவை காத்திரமாக அமைந்தால் எமது இனத்தின் விடுதலைக்கான நியாயப்பாடு சர்வதேசத்தில் பலப்படுத்தப்படும்.எனவே உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த சிறப்பு வாழ்வுரிமை மகா நாடும் ஒரு பலத்தை சேர்க்கட்டும்.இதற்காக பாடுபடுகின்றவர்கள் வரலாற்றால் மதிக்கப்படுவார்கள.; ஏதிலிகளாக நாடற்று அலையும் எமது இனத்தின் சோகம் எமது சந்ததிகளுக்கு இல்லாத வகையில் எமது நிலத்தில் நிமிர்ந்து வாழும் நாளுக்காய் இந்த வாழ்வுரிமை மகாநாடு வாசல்களை திறக்கும் வேகத்தை தரட்டும் என தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments