Latest News

October 18, 2015

எதிர்வரும் நாட்களில் மகிந்த கைது செய்யப்படலாம்-சாட்சியாக மாறுகிறார் பிள்ளையான்?
by admin - 0

முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் அதற்கு பிள்ளையானை சாட்சியாளராக பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலக்கட்டத்தில் அமைச்சராக செயறப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய, தன்னுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி,  குற்றத்திற்கு உதவுதல் மற்றும் உடந்தையாக ஆயுதங்கள் வழங்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் அல்லது பொலநறுவையில் வைத்து கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனக்கு தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை விடுத்தார்.
எனினும் கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்ததால் தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்பதனால், கொழும்பில் வைத்து கொலை செய்ய திட்டமிட்ட போதும், மஹிந்த அதனை நிராகரித்துள்ளார்.

பின்னர் எட்டப்பட்ட இணப்பாட்டிற்கமைய கொழும்பிற்கு அண்டிய பிரதேசமான பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரிகள் ஊடாக மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாகவும் எனினும் தற்போதைய ஜனாதிபதி மயிரிழையில் உயிரை காப்பாற்றி கொண்டுள்ளதாகவும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளார். 
இந்த முழுமையான திட்டம் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஊடாக எதிர்கட்சிக்கு அறிவித்ததாகவும், அவர்கள் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பிள்ளையான் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
ஜோசப் பரராஜ சிங்கத்தை கொலை செய்வதற்கான காரணத்தை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு விளக்கிய பிள்ளையான், ராஜன் சத்தியமூர்த்தியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்கு சந்தர்ப்பமேற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் விடுதலை புலிகளினால் அதற்கு முன்னரே சத்திய மூர்த்தி கொலை செய்யப்பட்டதாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார். 
ஜோசப் பரராஜசிங்க புலிகள் அமைப்பின் கைப்பாவை என பிள்ளையான் தெரிவித்துள்ளார். 
அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியதும் புலிகளின் கைப்பாவை என அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்வதற்காக T -56 துப்பாக்கிகள் இரண்டு பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்களில் ஒருவர் அதற்கு பின்னர் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்ற நபர் இதுவரையில் வெளிநாட்டில் வசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
விடுதலை புலிகள் அமைப்பு பிளவுபட்டதனை அடுத்து அநாதைகளாகப்பட்ட புலிகள் அமைப்பின் குறைந்த மட்டத்திலான செயற்பாட்டாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினால் செயற்படுத்தப்பட்டதாகவும், நாட்டில் பல பிரதேசங்களில் தமிழ் தேசிய துப்பாக்கிதாரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கொலைகளுக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். 
இந்த தகவல்களுக்கமைய இராணுவ புலனாய்வு பிரிவின் பலர் எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
« PREV
NEXT »

No comments