தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி மரணம் அடைந்துள்ளார்.
கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே 2013 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டர்.
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழினி கிளிநொச்சி பரந்தனில் இன்று (18.10.2015) காலைகாலமானார்.
கடந்த சில நாட்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த தமிழினி, கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புனர்வாழ்வு நடவடிக்கையின் போது பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி சுகயினமுற்று இருந்தார். கடந்த நாட்களாக நோயினால் ஆவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார். இவரின் மரணம் புலனர்வாழ்வு பெற்ற போராளிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .
No comments
Post a Comment