Latest News

October 05, 2015

மீண்டும் சொதப்பிய இந்தியா- தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா
by Unknown - 0

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

இந்தியா- தென்னப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணித்தலைவர் டு பிளெசிஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினார்கள்.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.

இந்நிலையில், 4-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இதே போல் அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 22 ஓட்டம், ரெய்னா 22 ஓட்டம் எடுத்தினர் இறுதியில் சற்று ஆறுதலாக துடுப்பெடுத்தாடிய அஸ்வீனும் 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 17.2 ஓவரில் 92 ஓட்டங்களில் சுருண்டது.

தென்னாப்பிரக்கா தரப்பில் அல்பி மோர்கல் 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், மோரிஸ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 93 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஏ.பி. டிவில்லியர்ஸ் மற்றும் அம்லா களமிறங்கினர்.

அம்லா 2 ஓட்டங்கள் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டூ பிளாசிஸ் 16 ஓட்டங்களிலும், டிவில்லியர்ஸ் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுமினி இந்த ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார்.

அவருடன் இணைந்த பிரஹாடின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரஹாடின் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததையடுத்து மில்லர் களம் புகுந்தார்.

இறுதியில் ரெய்னாவின் பந்தில் பவுண்டரி அடித்த டுமினி தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற செய்தார். அப்போது டுமினி 30 ஓட்டங்களிலும் மில்லர் 10 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்திய தரப்பில் அஸ்வீன் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.

« PREV
NEXT »

No comments