Latest News

October 05, 2015

ஈழத்தமிழரை மெது மெதுவாகக் கொலை செய்யும் தமிழக அரசு!!!!
by அகலினியன் - 0

ஈழத்தமிழரை மெது மெதுவாகக் கொலை செய்யும் தமிழக அரசு!!!!
கடந்த 01.10.2015 அன்று முதல் திருச்சி சித்ரவதை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்து உறவுகள்... தமது விடுதலையை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொணடு வருகின்றனர்.

இன்றுடன் ஐந்து நாட்களாகியும் எந்தவொரு அரசு அதிகாரிகளும் வந்து பார்வையாடாமல்... தமது தேகத்தை பட்டினி போட்டு உருக்கி வரும் நம் உறவுகளின் உடல்நிலை சீரற்றுப் போவதால்... இன்று மருத்துவ அதிகாரிகள் சென்று உடல் பரிசோதனை செய்துள்ளார்கள்.
சோதனையின் பின் மருத்துவர்களின் அறிக்கையின்படி அனைவரது உடல்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அறிய முடிகிறது.
ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறை உள்ளதாக கூறும்... தமிழக அரசு தனது ஆட்சியில் உள்ள ஈழத்தமிழரை மெது மெதுவாக முறையற்ற சட்டத்தின்படியும்.. முறையற்ற செயற்பாடுகள் மூலமும கொல்வது ஏன்??? இதுதான் தமிழர் விடயத்தில் காட்டும் கரிசனையா???

திருச்சி சித்ரவதை சிறப்பு முகாமிலுள்ள ஈழத்து உறவுகளின் உண்மை அவலநிலையினை மிகவும் சிறப்பாக வேதனையோடு படமெடுத்துக் காட்டும் NEWS7 தொலைக்காட்சி



இரண்டாவது காணொளி...



மூன்றாவது காணொளி...



நான்காவது காணொளி...



ஐந்தாவது காணொளி...

« PREV
NEXT »

No comments