Latest News

October 13, 2015

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம்!- பிரித்தானியா வலியுறுத்து
by admin - 0

இலங்கையில் இடம்பெறவுள்ள உள்ளுர் பொறிமுறையி;ன் கீழான போர்க்குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் என்று பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இயங்கும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா யோசனையின்படி இலங்கைக்கு உள்ளுர் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்கும் செயற்பாடு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ள வெளிநாட்டு பங்களிப்பு அவசியமானதாகும்.

இந்தநிலையில் பிரித்தானியா இலங்கைத் தமிழர் விடயத்தில் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என்றும் ஸ்வைர் குறிப்பிட்டுள்ளார்
« PREV
NEXT »

No comments