Latest News

September 30, 2015

யுத்தக்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தக் கூடிய நீதி மன்றக்கட்டமைப்பு இலங்கையிடம் கிடையாது:
by Unknown - 0

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தக் கூடிய நீதி மன்றக் கட்டமைப்பு இலங்கையிடம் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹசெய்ன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ள நீதிமன்றக் கட்டமைப்பு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தக்கூடிய அளவிற்கு பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றின் ஊடாக குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் பங்களிப்புடனான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்டதின் கீழான கைதுகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments