Latest News

September 30, 2015

ஸ்ரீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.அறிக்கை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படும்!
by Unknown - 0

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை சம்பந்தப்பட்ட நாடான இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளதன் காரணமாக வாக்கெடுப்பின்றி அறிக்கையின் பிரேரணைகள் நிறைவேற்றப்படும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனீவா சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த அறிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஒரு சில உறுப்பு நாடுகள் குறித்த அறிக்கையில் சிற்சில மாற்றங்களை முன்மொழியவிருப்பதாக அறிவித்துள்ளன.

அவ்வாறான மாற்றங்கள் இலங்கைக்கு எதிரானதாக இருக்கும் பட்சத்தில் சீனா மற்றும் அமெரிக்கா என்பன தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த முன்மொழிவுகளைத் தடுத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments