Latest News

September 21, 2015

அமெரிக்காவின் நகல் பிரேரணை கூட்டத்தில் ஸ்ரீலங்கா கடும் ஆட்சேபனை!
by Unknown - 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பிலான கருத்தறியும் கூட்டம் ஐ.நா மன்றத்தின் பக்க அறையில் ஆரம்பமானது.

இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக நாடுகளின் கருத்துக்களை அறியும் நடைமுறையில் இக் கூட்டம் நடைபெறுகிறது. 

ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதுவர் தனது ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன் இப்படியான செயற்பாடுகள் தமது இறைமையை பாதிப்பதாக உள்ளதாக தனது அதிருப்தியை வெளியிட்டார்.

அத்துடன் அதிகளவான நாடுகள் கடந்த காலத்துடன் இலங்கையில் இருந்த கடுமையான கருத்தினை இம்முறை வெளியிடுவதில் தயக்கம் காட்டியதுடன், அமெரிக்காவின் நகல் பிரேரணை இலங்கை வெளிவிவகார அமைச்சர் கடந்த வாரம் ஐ.நா மன்றத்தில் ஆற்றிய உரையை அடிப்படையாக கொண்டுள்ளதான விமர்சனம் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நகல் பிரேரணை கூட்டத்தில் இலங்கையில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புலம்பெயர் மனித உரிமைகள் அமைப்புக்கள், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் என்பன கலந்து கொண்டது கொண்டன.

« PREV
NEXT »

No comments