Latest News

September 20, 2015

சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமிழர்களுக்கானது இல்லை-கலம் மெக்ரே
by Unknown - 0

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாட்டிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்  உண்மையில் தமிழர் விடயத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்று, ஊடகவியலாளர் கலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.

தமிழீழ ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.மைத்திரி, ரணில் கூட்டு அரசாங்கம், முன்னாள் அரசாங்கத்தை காட்டிலும் முன்னேற்றக்கரமான பல விடயங்களை மேற்கொண்டுள்ளது. ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது, ஊழல்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றன. சர்வதேசத்துடன் நல்லுறவை பேணுகிறது. ஆனால் தமிழர் விடயத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.அவர்களின் பிரச்சினைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.

சர்வதேசத்துக்கு ஒரு மாதிரியும், தமிழர்களுக்கு ஒருமாதிரியுமாக சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறது. யுத்தக்குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச ரீதியாக அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் நாட்டில் யாரையும் காட்டிக் கொடுக்கவோ, தண்டிக்கவோஅனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து வருகிறார்.அத்துடன் யுத்தக்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள பலருக்கு முக்கிய பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு எவ்வாறு அரசாங்கம் தீர்வு வழங்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளே அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments