Latest News

September 20, 2015

தமிழ் இளைஞர் ஒன்றியத்தினால் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துக்கு கொடுக்கப்பட்ட மகஜர்!
by Unknown - 0

தமிழ் இளைஞர் ஒன்றியத்தினால் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துக்கு கொடுக்கப்பட்ட இரண்டு பக்கங்கள் அடங்கிய மகஜர் தமிழ் மற்று ஆங்கில மொழியின் முழு வடிவத்தில்கீழே தரப்படுகின்றது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை சர்வதேச நீதி விசாரணை மூலம் விசாரிக்க கோரும் விண்ணப்பம்!!!

கனம் ஐயா/அம்மணி,

தமிழ் இளைஞர் ஒன்றியத்தினராகிய நாம் தங்களிடம் இலங்கையில் சிங்கள இராணுவத்தினர் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததை எதிர்த்து சர்வதேச விசாரணையை வலியுறுத்த கோரி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தங்களிடம் இந்த கோரிக்கையை முன் வைக்க விரும்புகின்றோம்.

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் திட்டமிடப்பட்டு இனப்படுகொலை நடைபெற்றது என்பதை தாங்களும் அறிவீர்கள். அவற்றில் சில தங்கள் பார்வைக்கு.

01) ஊடகவியலாளர் இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினால துன்புறுத்தப்பட்டு பாலியல்
வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

02) சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டது.

03) பொதுமக்களின் நிலைகள் மீது கண்மூடித்தனமான குண்டு தாக்குதல் மேற்கொண்டது.

04) சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட கொத்து குண்டுகளை பயன்படுத்தியமை

05) மருத்துவமனை மீதும் பாடசாலைகள் வழிபாட்டு தலங்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டது

06) சிறிய குழந்தைகள் என்று கூட பார்க்காமல் சுட்டுக்கொன்றது

07) சரணடைந்தவர்களை விசாரணை நடத்தாமல் சுட்டுக்கொன்றது மட்டுமல்லாமல் வதைமுகாம்களை இன்றுவரை நடாத்திவருவது .

08) ஆபத்தில் மருத்துவ உதவி செய்ய சென்ற மருத்துவர்களை செய்ய விடாது தடைசெய்தமை அவர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்தமை

09) ஆயிரக்கணக்கான யுவதிகளை இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தமை

10) ஆயிரக்கணக்கான இளைஞர்களை மிக கொடுமையான விதத்தில் படுகொலை செய்தமை

11) இறுதி யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழர் வாழ்விடங்களை கட்டாய சிங்கள குடியேற்றங்களை செய்வதும் இராணுவ படைமுகாம்களை அமைப்பதுமாக இன்று வரை தமிழரை துன்புறுத்துவது.

12) வடக்கு கிழக்கில் இராணுவத்தை வெளியேற்றாமல் தமிழ் மக்களை பயமுறுத்தி தமது கட்டுபாட்டில் திறந்தவெளி கைதிகள் போல வைத்திருக்க முயல்வது

இது மட்டுமல்ல இன்னும் ஏராளம் கொடுமைகள் நடந்தேறியது சர்வதேச விசாரணை நடந்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும். தற்போது நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இது சம்பந்தமான தீர்மானம் நிறைவேற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் நீதிவிசாரணை கோருவதென்ற உரிமை இருக்கின்றது. எமக்கு பாதிப்பை தந்தவர்களிடமே நீதிவிசாரணை நடத்தும்படி சில நாடுகள் சொல்வது முற்றிலும் ஏற்புடையதில்லை எனவே தாங்கள் ஒரு நடுநிலையான சர்வதேச அமைப்பு என்பதை அறிவோம் அதனால் தான் தங்களிடம் இதை கையளிக்க விரும்புகின்றோம். ஆகவே நாம் தங்களிடம் கையளித்திருக்கும் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!

The memorandum contains two pages given to the establishment of the United Nations by the United Tamil Youth of the English language is published below

Application for international judicial inquiry to investigate the genocide in Sri Lanka by!!!

Dear Sir/Madam

We are the United tamil youth,
Indiscriminate slaughter of innocent Tamil civilians in Sri Lanka, Sinhalese armed themselves against the international investigation on behalf of people affected by seeking to emphasize their wish to put forward for this request .

In the final phase of the civil war in Sri Lanka in 2009 and implemented by the Sri Lankan army, they know that the genocide took place , some of them with their eyes

01) Isaipriya raped and murdered journalists were harassed by the Sri Lankan military .

02) The boy Balachandran was arrested and tortured after the assassination of the Sri Lanka Army was salvaged

03) Conducted indiscriminate bombing of civilian positions .

04) The use of cluster bombs banned by international

05) The Sri Lankan army launched attacks on Hospitals and schools and places of worship

06) Not even that small children shot dead

07) To date only the concentration camps without trial, to conduct surrendered killings.

08) Forbade the doctors to render medical assistance to those in danger of being portrayed as terrorists

09) The slaughter of hundreds of thousands of men and women subjected to sexual abuse, the Sri Lankan Army

10) The slaughter of hundreds of thousands of young people in the most cruel way

11) Tamils and Sinhalese settlements habitats before and after the war to end compulsory military barracks until today launched the persecution of formation

12) His control of the army to terrorize the Tamil population in the north-east logged

Endeavoring to keep the prisoners in the open It happens not only more abundant atrocities took place, international investigation Revealed a number of facts . The present United Nations Conference on Human Rights in this regard is that the entire affected population expects the resolution to be fulfilled.Who has the right of victims to request to the court . We investigate the Effect Of righteousness to those who claim that some countries are completely unacceptable thing So they know that a neutral international organization and that's why we like to give it to them So in view of these issues , which we handed to them humbly urge to take action

Thank You
United Tamil Youth.


« PREV
NEXT »

No comments